பால் மா விலை இன்று குறைகிறது

🕔 April 25, 2024

றக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் இன்று (25) தொடக்கம் குறைக்கப்படும் என, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 01 கிலோ பால் மாவின் விலை ரூபாவால் 250 ரூபா தொடக்கம் 300 ரூபாய் வரையில் குறையவுள்ளது.

அதேவேளை, 400 கிராம் பால் மாவின விலை 100 ரூபாய் தொடக்கம் 130 ரூபாய் வரையில் குறைவடையும்.

மார்ச் மாதம் நடுப்பகுதியளவிலும் பால் மாவின் விலைகள் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்