ரஞ்சன் வெளிநாடு செல்வதை தடுத்த குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள்: காரணத்தை வெளியிட்டார் ரஞ்சன்

ரஞ்சன் வெளிநாடு செல்வதை தடுத்த குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள்: காரணத்தை வெளியிட்டார் ரஞ்சன் 0

🕔28.Oct 2022

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட பிழையினால், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை இரவு தான் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, இன்று (28) அமெரிக்கா செல்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். “எனக்கு எந்த பயணத் தடையும் விதிக்கப்படவில்லை என்று எனது வழக்கறிஞர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து நான் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும்

மேலும்...
திருட வந்த இடத்தில் சமைத்து சாப்பிட்டு விட்டு, தொலைக்காட்சி பார்த்தவாறே படுத்துறங்கிய திருடர்கள்: வட்டுக்கோட்டையில் சம்பவம்

திருட வந்த இடத்தில் சமைத்து சாப்பிட்டு விட்டு, தொலைக்காட்சி பார்த்தவாறே படுத்துறங்கிய திருடர்கள்: வட்டுக்கோட்டையில் சம்பவம் 0

🕔27.Oct 2022

வீடொன்றின் உரிமையாளர்கள் இல்லாத இரவு நேரத்தில் திருடுவற்காகச் சென்றவர்கள், அங்கு உணவைத் தயாரித்து சாப்பிட்டு விட்டு, தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே அயர்ந்து தூங்கியுள்ள சம்பவமொன்று வட்டுக்கோட்டை – மூளாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று அதிகாலை வீடு திரும்பிய வீட்டின் உரிமையாளர், தனது படுக்கையில் இரண்டு பேர் தூங்குவதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அவசர பொலிஸ் இலக்கமான 119

மேலும்...
சைக்கிளில் அலுவலகம் வருவோருக்கு கடனுதவி; லேசான ஆடையில் வரவும் அனுமதி: நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் அறிவிப்பு

சைக்கிளில் அலுவலகம் வருவோருக்கு கடனுதவி; லேசான ஆடையில் வரவும் அனுமதி: நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் அறிவிப்பு 0

🕔27.Oct 2022

– முனீரா அபூபக்கர் (ஊடகப் பிரிவு) – உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 31ஆம் திகதி திங்கட்கிழமை – முதல் வாரத்தில்; ‘ஒரு நாள் சைக்கிள் வேலை’ திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்பாடு செய்துள்ளது. உலக நகர தினமான ஒக்டோபர் 31ஆம் திகதி – இதன் ஆரம்ப விழா நடைபெறவுள்ளதாக நகர அபிவிருத்தி

மேலும்...
ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றிலிருந்து 3.5 மில்லியன் ரூபா பெறுமதியான பொருள்கள் மாயம்: கணக்காய்வில் அம்பலம்

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றிலிருந்து 3.5 மில்லியன் ரூபா பெறுமதியான பொருள்கள் மாயம்: கணக்காய்வில் அம்பலம் 0

🕔27.Oct 2022

ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவில் இருந்து சுமார் 35 மில்லியன் ரூபா பெறுமதியான பல பொருட்கள் காணாமல் போயுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது. கணக்காய்வு செய்யப்பட்ட திகதி வரை, காணாமல் போன பொருட்கள் குறித்து – எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அந்த கணக்காய்வு அறிக்கையில்

மேலும்...
புகைப்பவர்களில் 93.5 வீதமானோர் தொடர்பாக, புள்ளி விவரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

புகைப்பவர்களில் 93.5 வீதமானோர் தொடர்பாக, புள்ளி விவரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல் 0

🕔27.Oct 2022

இலங்கையில் புகைப்பிடிக்கும் வயது வந்தோரில் 93.5 வீதமானோர், புகைப்பிடித்தலினால் கொடிய நோய்கள் ஏற்படும் என நம்புகின்றனர் என, புள்ளி விவரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்நோய்கள் பற்றிய விழிப்புணர்வு இருந்தபோதிலும், அவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்களாக அல்லது அவர்களின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலையற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது எனவும், அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள

மேலும்...
சிறுவர்கள் தொடர்பில் மாதம் ஒன்றுக்கு 600 முறைப்பாடுகள்

சிறுவர்கள் தொடர்பில் மாதம் ஒன்றுக்கு 600 முறைப்பாடுகள் 0

🕔27.Oct 2022

சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு 600 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெறுவதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார். கடந்த வருடம், சிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள் அதாவது சுமார் 10,000 முறைப்பாடுகள் மேல் மாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். “அந்த முறைப்பாடுகள் தொடர்பாக சட்ட

மேலும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 10 எம்.பிகளில் எவருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை இல்லை: சுமந்திரன் தெரிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 10 எம்.பிகளில் எவருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை இல்லை: சுமந்திரன் தெரிவிப்பு 0

🕔27.Oct 2022

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருமே இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் அல்லர் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட முன்வந்து,

மேலும்...
04 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் உடற் தகுதியற்றோர்: சேவையிலிருந்து நீக்குவது தொடர்பில் கவனம்

04 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் உடற் தகுதியற்றோர்: சேவையிலிருந்து நீக்குவது தொடர்பில் கவனம் 0

🕔26.Oct 2022

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 4,000 க்கும் மேற்பட்ட பொலிஸார், கடமையாற்றுவதற்கு உடல் தகுதியில்லாதவர்கள் என பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதனையடுத்து நீண்ட காலமாக திறனற்ற நிலையிலுள்ள பொலிஸாரை பணி நீக்கம் செய்வது தொடர்பில், தேவையான யோசனையை தயாரித்து அமைச்சுக்கு

மேலும்...
கல்முனை மாநகர சபையின் மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக கலீலுர் ரஹுமான் சத்தியப் பிரமாணம்

கல்முனை மாநகர சபையின் மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக கலீலுர் ரஹுமான் சத்தியப் பிரமாணம் 0

🕔26.Oct 2022

– பாறுக் ஷிஹான் – கல்முனை  மாநகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய  உறுப்பினராக  தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் முஹம்மது அலியார் கலீலுர்  ரஹுமான், கல்முனை மாநகர சபை மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (25)  சத்திய பிரமாணம் செய்து கொண்டார். கல்முனை மாநகர சபையில் அகில இலங்கை

மேலும்...
பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேர், 02 பிக்குகள், பாடசாலை மாணவர்கள் நால்வர் உட்பட 342 பேருக்கு இவ்வருடம் எச்ஐவி தொற்று

பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேர், 02 பிக்குகள், பாடசாலை மாணவர்கள் நால்வர் உட்பட 342 பேருக்கு இவ்வருடம் எச்ஐவி தொற்று 0

🕔26.Oct 2022

பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 50 பேர், இந்த ஆண்டின் – முதல் ஒன்பது மாதங்களில் எச்ஐவி (HIV) யால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த வருடம் நான்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் இரண்டு பௌத்த பிக்குகள் உட்பட 342 எச்ஐவி தொற்றுக்குள்ளாகியமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்