பிரதமர் பதவியை ஏற்குமாறு சரத் பொன்சேகாவிடம் கோட்டா கோரிக்கை: பேசப்பட்ட விடயங்கள் என்ன?

பிரதமர் பதவியை ஏற்குமாறு சரத் பொன்சேகாவிடம் கோட்டா கோரிக்கை: பேசப்பட்ட விடயங்கள் என்ன? 0

🕔12.May 2022

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாtவிடம் பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று (11) பிற்பகல் சரத் பொன்சேகா சந்தித்துள்ளார். கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நண்பகல் 12 மணியளவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு இரண்டரை மணித்தியாலங்கள் நீடித்ததாக

மேலும்...
பிரதமர் பதவிக்காக சுயாதீன நாடாளுமன்ற குழு பிரேரித்த பெயர்ப்பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பப்படவில்லை

பிரதமர் பதவிக்காக சுயாதீன நாடாளுமன்ற குழு பிரேரித்த பெயர்ப்பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பப்படவில்லை 0

🕔12.May 2022

சுயாதீன நாடாளுமன்ற குழுவினால் பிரதமர் பதவிக்காக பிரேரிக்கப்பட்டிருந்த பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டவில்லையென சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுயாதீன நாடாளுமன்ற குழுவினரின் கூட்டம் நேற்று (11) இடம்பெற்ற போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. நேற்று இடம்பெற்ற சுயாதீனக் குழு கூட்டத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும

மேலும்...
ஒரு வாரத்துக்குள் புதிய அரசாங்கம்; ஸ்திரம் ஏற்பட்ட பின்னர் 19ஆவது திருத்தம் அமுல்: நாட்டு மக்களுக்கான உரையில் கோட்டா வாக்குறுதி

ஒரு வாரத்துக்குள் புதிய அரசாங்கம்; ஸ்திரம் ஏற்பட்ட பின்னர் 19ஆவது திருத்தம் அமுல்: நாட்டு மக்களுக்கான உரையில் கோட்டா வாக்குறுதி 0

🕔12.May 2022

ஒரு வார காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைத்து, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்துவற்கு தான் நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (11) இரவு 09 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனைக் கூறினார். நாடு ஸ்திரதன்மை அடைந்த பின்னர், ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாது

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி, சுயாதீனமாக செயற்பட ஹரீன் எம்.பி தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி, சுயாதீனமாக செயற்பட ஹரீன் எம்.பி தீர்மானம் 0

🕔11.May 2022

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி, சுயாதீனமாக செயற்படவுள்ளதாக நாடாளுமுன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். “இந்த நாட்டுக்கு விரைவில் அரசாங்கம் ஒன்று தேவை. இதை நாம் தாமதிக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி இதை தாமதப்படுத்துவதால், நான் சுயாதீனமாக இருக்க முடிவு செய்துள்ளதோடு, அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆதரிக்கிறேன்”என்று அவர் ஆங்கில ஊடகமொன்றிடம் கூறியுள்ளார். “தேர்தலில்

மேலும்...
அதாஉல்லா தரப்பினருக்கு அக்கரைப்பற்றில்  ஏற்பட்ட உடனடிச் ‘சூன்’: ராஜபக்ஷவினர் மீதான  கோபத்துக்கு காரணம் என்ன? உளறிக் கொட்டினார் அஸ்மி

அதாஉல்லா தரப்பினருக்கு அக்கரைப்பற்றில் ஏற்பட்ட உடனடிச் ‘சூன்’: ராஜபக்ஷவினர் மீதான கோபத்துக்கு காரணம் என்ன? உளறிக் கொட்டினார் அஸ்மி 0

🕔11.May 2022

– மரிக்கார் – ராஜபக்ஷக்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்தமையினை அடுத்து, ராஜபக்ஷவினரும் அவர்களின் ஆதரவானவர்களும் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். ராஜபக்ஷ தரப்பினரின் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சொத்துக்களை மக்கள் சேதப்படுத்தி, அவர்கள் மீதான கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய காங்கிரஸ்

மேலும்...
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் வெளியிட்ட ‘நாட்டின் எதிர்காலம் குறித்த 13 முன்மொழிவு’களில் மாற்றங்கள் தேவை: சாணக்கியன் எம்.பி கோரிக்கை

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் வெளியிட்ட ‘நாட்டின் எதிர்காலம் குறித்த 13 முன்மொழிவு’களில் மாற்றங்கள் தேவை: சாணக்கியன் எம்.பி கோரிக்கை 0

🕔11.May 2022

“வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சார்ந்த விடயங்களை உள்ளடக்கம் செய்யாத ஒரு எதிர்காலம் இலங்கையில் இல்லை” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாட்டின் எதிர்காலம் குறித்த 13 முன்மொழிவுகளை வெளியிடும் நிகழ்வு இன்று(புதன்கிழமை) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் உள்ளார்: பாதுகாப்பு செயலாளர் உறுதிப்படுத்தினார்

மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் உள்ளார்: பாதுகாப்பு செயலாளர் உறுதிப்படுத்தினார் 0

🕔11.May 2022

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவரின் பாதுகாப்புக் கருதி திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் இன்று பேசிய அவர்; “இயல்புநிலை திரும்பிய பிறகு, அவர் விரும்பிய இடத்துக்கு அனுப்பி வைப்போம்” என்றும் கூறியுள்ளார். திருகோணமலை கடற்படை முகாமில் மஹிந்த ராஜபக்ஷ தஞ்சமடைந்திருப்பதாக நேற்றைய தினமே செய்திகள்

மேலும்...
கடலில் குளித்த மாணவர்கள் இருவர் மாயம்: மருதமுனைப் பகுதியில் சோகம்

கடலில் குளித்த மாணவர்கள் இருவர் மாயம்: மருதமுனைப் பகுதியில் சோகம் 0

🕔11.May 2022

– பாறுக் ஷிஹான் – பாடசாலை மாணவர்கள் மூவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில், ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) மாலை 5.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் – மருதமுனை கடற்கரைப்பகுதியில் நடந்துள்ளது. சுமார் 17 முதல் 18 வரை வயது மதிக்கத்தக்க அங்குள்ள பிரபல பாடசாலை மாணவர்களே

மேலும்...
நாட்டில் நடந்த வன்முறைகளில் 09 பேர் பலி; 219 பேர் காயம்: பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவிப்பு

நாட்டில் நடந்த வன்முறைகளில் 09 பேர் பலி; 219 பேர் காயம்: பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவிப்பு 0

🕔11.May 2022

நாட்டில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 09 பேர் பலியாகியுள்ளனர் என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார். இவ்வாறு பாலியனவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவர் எனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நேற்று முன்தினம் நடந்த வன்முறையில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரை

மேலும்...
சஜித் பிரதமர் ஆகுவதற்கு சுதந்திரக் கட்சி ஆதரவு: தயாசிறி ஜயசேகர

சஜித் பிரதமர் ஆகுவதற்கு சுதந்திரக் கட்சி ஆதரவு: தயாசிறி ஜயசேகர 0

🕔11.May 2022

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமராக பதவியேற்கத் தயாராக இருந்தால், அவருக்கு ஆதரவளிக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் அணியும் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மாத்திரமே, சஜித் பிரேமதாஸ – பிரதமர் பதவியை ஏற்பாரென நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்