ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்த்தன: மண் கவ்வினார் ரவி

ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்த்தன: மண் கவ்வினார் ரவி

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பிரதி செயலாளராகப் பதவி வகித்து வந்த நிலையில், இந்தப் பதவி இவருக்குக் கிடைத்துள்ளது. இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது இடம்பெற்ற ரகசிய வாக்கெடுப்பில் அவர் புதிய தலைவர் பதவிக்கு தெரிவானார். புதி தலைவர் பதவிக்காக கட்சியின் உப தலைவர்

மேலும்...
‘கஞ்சிபான’ தரப்பினரின் உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவு

‘கஞ்சிபான’ தரப்பினரின் உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவு

பூசா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கைதிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். கஞ்சிபான இம்ரான்,வெலே சுதா உள்ளிட்ட 45 கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த சில நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். தொலைபேசி வசதிகள், அவர்களை பார்வையிட வரும் சட்டத்தரணிகளுடன் உரையாடும் நேர நீடிப்பு மற்றும் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றம் சென்று

மேலும்...
ஒன்பது மாகாணங்களுக்குப் பதிலாக, மூன்று மாகாணங்கள்: சரத் வீரசேகர தெரிவிப்பு

ஒன்பது மாகாணங்களுக்குப் பதிலாக, மூன்று மாகாணங்கள்: சரத் வீரசேகர தெரிவிப்பு

நாட்டில் தற்போதுள்ள ஒன்பது மாகாணங்களுக்கு பதிலாக பண்டைய அரச காலத்தில் இருந்தது போல் ருகுணு, பிஹிட்டி மற்றும் மாயா ஆகிய மூன்று மாகாணங்களை மாத்திரம் உருவாக்கி முன்னெடுத்துச் செல்லலாம் என நிபுணர்கள் குழு வழங்கிய யோசனையை அரசாங்கத்திடமும் வழங்க உள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மாகாண சபை மற்றும் பிரதேச

மேலும்...
அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டம் இன்று ஆரம்பம்

அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டம் இன்று ஆரம்பம்

அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான திசைமுகப்படுதல் பயிற்சித் திட்டம், நாடு முழுவதுமுள்ள பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படையணி தலைமையகங்கள் மற்றும் ராணுவ பயிற்சிப் பாடசாலைகள் என 51 ராணுவ நிலையங்களில் இன்று திங்கள்கிழமை கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படுகின்றது. ஐந்து கட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டமானது ஒரு மாத கால வதிவிட பயிற்சி

மேலும்...
20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய, நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை நியமித்தார் பிரதமர்

20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய, நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை நியமித்தார் பிரதமர்

அரசியலமைப்பில் 20 ஆவது திருத்தம் மேற்கொள்ளவுள்ளமை தொடர்பில் ஆராய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விசேட குழு ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்களாக 09 பேர் இடம்பெற்றுள்ளனர். அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந்த குழுவின் தலைவராக செயற்படவுள்ளார். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான,

மேலும்...
மாடறுப்புத் தடையின் பின்னாலுள்ள பூகோள அரசியல் குறித்து, பஷீர் சேகுதாவூத் கருத்து

மாடறுப்புத் தடையின் பின்னாலுள்ள பூகோள அரசியல் குறித்து, பஷீர் சேகுதாவூத் கருத்து

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை இல்லாமல் செய்வதினால் இந்தியாவிற்கு ஏற்படுகின்ற கோபத்தை மாடறுப்புத் தடை எனும் விடயத்தினால் சமப்படுத்தலாம் என அரசாங்கம் எண்ணுகிறது என்றும், அதுதான் பூகோள அரசியல் எனவும் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போது அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய, சட்டத்தரணிகள் சங்கத்தினால் நிபுணர் குழு நியமனம்

20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய, சட்டத்தரணிகள் சங்கத்தினால் நிபுணர் குழு நியமனம்

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வரும் பொருட்டு முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயமன்ன தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் குழுவில் உறுப்பினர்களாக 13 ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் இரண்டு சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நிர்வாக குழு மற்றும்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: சாட்சியத்தை ஒலிப்பதிவு செய்த மௌலவி மீது நடவடிக்கை

ஈஸ்டர் தின தாக்குதல்: சாட்சியத்தை ஒலிப்பதிவு செய்த மௌலவி மீது நடவடிக்கை

ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சியம் வழங்கியபோது, அதனை தனது கைபேசியில் ஒலிப்பதிவு செய்த நபர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்த ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். மேற்படி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியங்கள் வழங்கப்படும்போது

மேலும்...
புத்தரின் உருவம் பதிக்கப்பட்ட புடவையை அணிந்து வந்த பெண் கைது

புத்தரின் உருவம் பதிக்கப்பட்ட புடவையை அணிந்து வந்த பெண் கைது

புத்தரின் உருவம் பதிக்கப்பட்ட புடவையை அணிந்துவந்த பெண் ஒருவர் நாரஹேன்பிட்டியில் வைத்து நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு வந்த குறித்த பெண்ணின் உடையை அவதானித்த வைத்தியசாலை அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். மருத்துவர் ஒருவருடைய மன்னார் பகுதியிலுள்ள இல்லத்தில் உதவி பணிசெய்யும் குறித்த பெண், அந்த மருத்துவர் சுகயீனமடைந்த நிலையில், அவரை

மேலும்...
கஞ்சிபான இம்ரான், வெலே சுதா உள்ளிட்ட கைதிகள் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டம்

கஞ்சிபான இம்ரான், வெலே சுதா உள்ளிட்ட கைதிகள் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டம்

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக முக்கிய புள்ளிகள் உள்ளிட்ட கைதிகள், உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை தொடர்கம் அவர்கள் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான குற்றச்செயல்கள் தொடர்பில் தண்டணை விதிக்கப்பட்டுள்ள 45 கைதிகளில் 39 பேர் இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்...