ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிப்பு

ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிப்பு

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 23ஆம் திகதி தொடக்கம் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்தப் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று திங்கட்கிழமை ரிப்கான ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதன்போது அவரை 25,000

மேலும்...
மக்கள் நடமாடும் இடத்தில் மின் கசிவு; மின்சார சபையின் கல்முனை அலுவலகத்தினர் அலட்சியம்

மக்கள் நடமாடும் இடத்தில் மின் கசிவு; மின்சார சபையின் கல்முனை அலுவலகத்தினர் அலட்சியம்

– பாறுக் ஷிஹான் – கல்முனை சிங்கள மகாவித்தியாத்திற்கு அண்மித்த சந்தி ஒன்றிலே மின்கம்பத்துடன் இணைந்த மின்பிறப்பாக்கி (டிரான்ஸ்போமர்) மேலாகச் செல்லும் மின்கம்பிகளில் அபாயகரமாக மின்கசிவு ஏற்பட்டுள்ள போதும், அதனை மின்சார சபையினர் கவனத்திற் கொள்ளவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கல்முனை மின் பொறியலாளர் பிரிவுக்குட்பட்ட இடத்தில் இந்த மின் கசிவு கடந்த 4

மேலும்...
10 கோடி ரூபா தங்கத்துடன் படகில் பயணித்த இருவர் கைது

10 கோடி ரூபா தங்கத்துடன் படகில் பயணித்த இருவர் கைது

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் படகொன்றில் பயணித்துகொண்டிருந்த இருவர் கடற்படையினரிடம் சிக்கியுள்ளனர்.  குறித்த தங்கம் 14.35 கிலோகிராம் எடை உடையதென கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.  மேற்படி இருவரும் கடற்படையினரின் ஆணையை பொருட்படுத்தாமல் படகில் பயணித்துகொண்டிருந்தாகவும், அதனால் அவர்களை சுற்றிவளைத்து பிடிக்க நேர்ந்தாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் போது மேற்படி

மேலும்...
அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு எதிராக சுவரொட்டிகள்

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு எதிராக சுவரொட்டிகள்

– பாறுக் ஷிஹான் – கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின்  வைத்திய அத்தியட்சகரின் செயற்பாட்டிற்கு எதிராக சுவரொட்டிகள் பரவலாக வெளியாகியுள்ளன. குறித்த சுவரொட்டிகள் யாவும் இன்று சனிக்கிழமை கல்முனை பிரதான வீதிகள், கடைகள் மற்றும் சந்தை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளில் ‘வெளியேறு.. வெளியேறு; ரஹ்மான் வைத்தியட்சகரே வெளியேறு’, ‘பாலியல் குற்றவாளிகளான தாதியர்களை வெளியேற்று’ என குறிப்பிடப்பட்டு,  ‘எமது

மேலும்...
ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு, அமெரிக்காவுக்குள் நுழையத் தடை

ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு, அமெரிக்காவுக்குள் நுழையத் தடை

ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு நிறைவு பெற்றத் தருணத்தில், இலங்கை ராணுவத்தின் 58ஆவது பிரிவினரால் மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது. அந்த ராணுவப் பிரிவுக்கு அப்போது ஷவேந்திர

மேலும்...
சாய்ந்தமருது நகர சபை உதயம்; வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

சாய்ந்தமருது நகர சபை உதயம்; வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருதுக்கான புதிய நகர சபையை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியானது. 2162/50 இலக்கத்தையுடைய மேற்படி வர்த்தமானி அறிவித்தலின் படி, 2022ஆம் ஆண்டு மார்ச்

மேலும்...
புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு, ஜனாதிபதியிடம் கையளிப்பு

புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு, ஜனாதிபதியிடம் கையளிப்பு

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ‘பலமானதொரு அரசு – எமது அரசியலமைப்பொன்றுக்கான முன்மொழிவுகள்’ என்ற கருப்பொருளின் கீழ் ‘யுத்துகம’ அமைப்பு தயாரித்த முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. எமக்கு உரிமையுள்ள பலமான அரசை மீண்டும்

மேலும்...
யானை இல்லாவிட்டால் போட்டியிட மாட்டேன்: நவீன் திஸாநாயக்க

யானை இல்லாவிட்டால் போட்டியிட மாட்டேன்: நவீன் திஸாநாயக்க

யானை சின்னத்தை தவிர – வேறு எந்த சின்னத்திலும் தான் போட்டியிட போவதில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான நவீன் திஸாநாயக்க  தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டணியின் சின்னம் தொடர்பாக கட்சியின் செயற்குழு எடுக்கும் தீர்மானமே இறுதியானது என்றும் கட்சி உறுப்பினர்களுக்கு சின்னம் தொடர்பாக தீர்மானம் எடுக்க எவ்வித அதிகாரமும் இல்லை

மேலும்...
அரசியல் பழிவாங்கல் தொடர்பில், 20 ஆயிரம் முறைப்பாடுகள்: அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவிப்பு

அரசியல் பழிவாங்கல் தொடர்பில், 20 ஆயிரம் முறைப்பாடுகள்: அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவிப்பு

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டவர்களிடமிருந்து 20 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக விசாரணைகளை மேற்கொளளும்  விசேட ஆணைக்குழுவின் தலைவர் ராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 25ஆம் திகதி வரை இது தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும். 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம்

மேலும்...
பரீட்சைகளில் கல்குலோட்டர் பயன்படுத்த விரைவில் அனுமதி: அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

பரீட்சைகளில் கல்குலோட்டர் பயன்படுத்த விரைவில் அனுமதி: அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

அரசினால் நடத்தப்படும் பரீட்சைகளில் கல்குலேட்டர்களை பரீட்சார்த்திகள் பயன்படுத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதியளிக்க தீர்மானித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட பரீட்சைகளுக்கே இந்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சிலம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வென்னப்புவையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இந்த மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகும் கணக்கியல் பரீட்சையில் கல்குலோட்டர்களை பயன்படுத்த முடியுமா?

மேலும்...