இலங்கை அரசாங்கத்தின் ‘சின்னத்தனம்’ குறித்து, மஹிந்தவிடம் பாகிஸ்தான் ஜனாதிபதி சொன்ன தகவல் அம்பலம்

இலங்கை அரசாங்கத்தின் ‘சின்னத்தனம்’ குறித்து, மஹிந்தவிடம் பாகிஸ்தான் ஜனாதிபதி சொன்ன தகவல் அம்பலம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த நிலையில், அந்த விஜயத்தை ரத்துச் செய்யுமாறு, பாகிஸ்தானிடம் இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டம் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹிந்த ராஜபக்ஷவிடம் பாகிஸ்தான் அரசாங்கத் தரப்பு, இந்த விடயத்தை எத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷவின் மேற்டி விஜயம் திட்டமிட்டபடி நிறைவேறியிருந்தது.

மேலும்...
குர்ஆனை படிக்க விரும்பிய தம்பர அமில தேரருக்கு, சிங்கள மொழிப் பிரதி வழங்கி வைப்பு

குர்ஆனை படிக்க விரும்பிய தம்பர அமில தேரருக்கு, சிங்கள மொழிப் பிரதி வழங்கி வைப்பு

ஜயவர்தனபுர பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், இனவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான தம்பர அமில தேரருக்கு, குர்ஆனின் சிங்கள மொழியாக்க பிரதி நேற்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. பேருவலைப் பகுதிக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமில தேரர், தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட சிங்கள மொழியிலான அல்குர்ஆன் பிரதி தனக்கு கிடைக்க வில்லை என்றும்

மேலும்...
முத்து, வைரம் பதிக்கப்பட்ட இரண்டு கிலோகிராம் தங்க நகைகளுடன், நபர் கைது

முத்து, வைரம் பதிக்கப்பட்ட இரண்டு கிலோகிராம் தங்க நகைகளுடன், நபர் கைது

இரண்டு கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய தங்க நகைகளை நாட்டுக்குள் கடத்த முயன்ற ஒருவர் பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில், நேற்று திங்கட்கிழமை இரவு 11.35 மணியளவில் கைது செய்யப்பட்டதாக, விமான நிலையத்தின் பிரதி சுங்கப் பணிப்பாளர் பரக்கிரம பஸ்நாயக தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய வர்த்தகர் என்றும், இவர் பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது. குறித்த

மேலும்...
பிரதியமைச்சர் அருந்திகவிடம் விசாரணை

பிரதியமைச்சர் அருந்திகவிடம் விசாரணை

பிரதியமைச்சர் அருந்திக பெனாண்டோ, நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு, இன்று செவ்வாய்கிழமை காலை வருகை தந்தார். வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே, அவர் அங்கு ஆஜராகியுள்ளார். பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை, அருந்திக பெனாண்டோ அண்மையில் ஜப்பானில் வைத்து சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து வாக்குமூலம் அளிக்கவே பிரதியமைச்சரை,  நிதி குற்ற விசாரணைப்

மேலும்...
மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்மாந்துறை குடும்பம் படுகாயம்: பொத்துவிலில் சம்பவம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்மாந்துறை குடும்பம் படுகாயம்: பொத்துவிலில் சம்பவம்

– கலீபா – பொத்துவில் ஊரணிப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் ஐந்து வயதுச் சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை பெருநாளையொட்டி, பொத்துவிலிலுள்ள நண்பரொருவரின் வீட்டுக்குச் சென்ற சம்மாந்துறை குடும்பத்தினர், மாலை வீடுதிரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த அப்துல் மஜீது முஹம்மது

மேலும்...
சாய்ந்தமருதுக்கு 50 வீடுகள்; ஜெமீலின் முயற்சியால் அமைச்சர் றிசாட் வழங்குகிறார்

சாய்ந்தமருதுக்கு 50 வீடுகள்; ஜெமீலின் முயற்சியால் அமைச்சர் றிசாட் வழங்குகிறார்

– எம்.வை. அமீர்- சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் 50 வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் இணக்கம் தெரிவித்துள்ளார். இதற்கான கடிதத்தினை,  அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல், சாய்ந்தமருது – மாளிகைக்காடு பள்ளிவாசல் தலைவரிடம் இன்று திங்கட்கிழமை ஒப்படைத்தார்.

மேலும்...
அக்கரைப்பற்று பொலிஸாரின் அக்கறை; பாராட்டுக்குரியது

அக்கரைப்பற்று பொலிஸாரின் அக்கறை; பாராட்டுக்குரியது

– ஆசிரியர் கருத்து – பண்டிகை காலங்களில் விபத்துக்கள் அதிகமாக நிகழ்கின்றமை வழமையாகும். குறிப்பாக இந்த நாட்களில்  மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்வோரில் கணிசமானோர் அதிக வேகத்துடன் பயணிப்பது, தலைக் கவசங்கள் இன்றி பயணிப்பது, ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டுக்கு மேற்பட்டோர் பயணிப்பது என, சட்டத்தை மீறுகின்றமையினால், அதிக விபத்துக்கள் நிகழும். அந்த வகையில், இன்றைய

மேலும்...
கம்மன்பிலவுக்குத் தெரிந்த மைத்திரி ரகசியம்; இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் வாய் திறந்தார்

கம்மன்பிலவுக்குத் தெரிந்த மைத்திரி ரகசியம்; இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் வாய் திறந்தார்

ஜாதிக ஹெல உறுமய கட்சியில் – தான் அங்கம் வகித்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உளவாளியாகச் செயற்பட்டதாக, ஜாதிக ஹெல உறுமய கட்சி சுமத்தியுள்ள குற்றச்சாட்டினை, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில நிராகரித்துள்ளார். எவ்வாறாயினும், ஜாதிக ஹெல உறுமய கட்சியினுள் வேறொரு நபர், உளவாளியாகச் செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும்...
சம்மாந்துறையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை

சம்மாந்துறையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை

– யு.எல்.எம். றியாஸ் –அம்பாறை மாவடடத்தில் முஸ்லிம் பிரதேசங்களில்  இன்று நோன்புப் பெருநாள் தொழுகை திடல்களிலும் பள்ளிவாசல்களிலும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.புத்தாடை அணிந்து  ஆண்களும் பெண்களும் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் பெருநாள் தொழுகைக்காக வருகை தந்திருந்தனர்.அந்த வகையில், சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகை சம்மாந்துறை அல் – மர்ஜான்  முஸ்லீம் மகளிர் கல்லூரி

மேலும்...
இலங்கைத் தூதரகங்கள் சிலவற்றினை மூடுவதற்கு, அரசாங்கம் தீர்மானம்

இலங்கைத் தூதரகங்கள் சிலவற்றினை மூடுவதற்கு, அரசாங்கம் தீர்மானம்

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரங்கள் சிலவற்றினை மூடிவிடத் தீர்மானித்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார். சமீப காலமாக எந்தவிதப் பயன்களுமற்றுக் காணப்படும் தூதரகங்களையே, இவ்வாறு மூடவுள்ளதாக அவர் கூறினார். ராஜதந்திர வழிமுறையில் மாற்றங்களை மேற்கொள்ளும், அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இந்த விபரங்களைத் தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளிலுள்ள சில

மேலும்...