Back to homepage

Tag "பாடசாலை"

நண்பிகளின் தண்ணீர் போத்தல்களில் நஞ்சு கலந்த மாணவி: மாணவத் தலைவர் போட்டி காரணம் என தெரிவிப்பு

நண்பிகளின் தண்ணீர் போத்தல்களில் நஞ்சு கலந்த மாணவி: மாணவத் தலைவர் போட்டி காரணம் என தெரிவிப்பு 0

🕔15.Aug 2023

மாணவி ஒருவர் களைக்கொல்லியை குடிநீரில் கலந்து அருந்த கொடுத்ததால் சுகவீனமுற்ற 6 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாரம்மல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவியொருவர் நேற்று (14) பாடசாலை நேரத்தில் இதனைச் செய்துள்ளார். சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மாணவிகளில், களைக்கொல்லியை தண்ணீரில் கலந்ததாகக் கூறப்படும் மாணவியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
பாடசாலைகளில் கைத்தொலைபேசிப் பயன்பாடு அதிகரிப்பு: மாணவர்களுக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை

பாடசாலைகளில் கைத்தொலைபேசிப் பயன்பாடு அதிகரிப்பு: மாணவர்களுக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை 0

🕔31.Jul 2023

பாடசாலைகளில் கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப கருவிகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக, மாணவர்கள் செயன்முறை கல்வியில் இருந்து விலகும் அபாயம் காணப்படுகிறது என்று,   மனநல மருத்துவ நிபுணர்  ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம் போசும்போதே அவர் இதனைக் கூறினார். அடிமையாதல் மற்றும் மாணவர்களின் மனநலம் பாதிக்கப்படுதை கருத்தில் கொண்டே பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி

மேலும்...
பாடசாலைகளுக்கான விடுமுறைத் திகதி அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறைத் திகதி அறிவிப்பு 0

🕔18.Jul 2023

அரச பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 21ஆம் திகதி நிறைவடைகின்றன. அதன்படி குறித்த தவணைக்கான விடுமுறை 21ஆம் திகதி வழங்கப்பட்டு, மீண்டும் 24ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்...
பாடசாலை சத்துணவு திட்டத்துக்காக, இரண்டு மாதங்களுக்கு 240 கோடி ரூபா செலவு

பாடசாலை சத்துணவு திட்டத்துக்காக, இரண்டு மாதங்களுக்கு 240 கோடி ரூபா செலவு 0

🕔31.Jan 2023

பாடசாலை சத்துணவுத் திட்டத்தின் கீழ், கடந்த வருடம் நொவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்காக – மாகாண மட்டத்தில் உணவு வழங்குநர்களுக்கு 2.4 பில்லியன் (240 கோடி) ரூபாவை அரசு வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி மேல் மாகாணம் 39 கோடி 94 லட்சத்து 18.220 ரூபா, மத்திய மாகாணம் ரூ. 26 கோடி 99

மேலும்...
அறிவுக்கு ஆயிரம் கண்கள்: பார்வையற்ற மாணவன் ஆஷிப்பின் சாதனைக் கதை

அறிவுக்கு ஆயிரம் கண்கள்: பார்வையற்ற மாணவன் ஆஷிப்பின் சாதனைக் கதை 0

🕔23.Mar 2022

– மப்றூக் – பார்வையில்லாதவர்களின் உலகம் இருள்மயமானது. சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தால் அதனை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.  அவ்வாறானதொரு உலகில், தனது அறிவாற்றல் மூலம் விளக்கொன்றை ஏற்றத் தொடங்கியிருக்கிறார் – இலங்கையின் அம்பாறைமாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள ‘றியாழுல் ஜன்னாஹ்’ பாடசாலையில் கற்கும் பார்வையற்ற மாணவன் ஏ.ஆர். ஆஷிப், நாடளாவிய ரீதியில்

மேலும்...
பிள்ளையின் தாய் போல வந்த அதிகாரியிடம் சிக்கிய அதிபர்: லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விளக்க மறியல்

பிள்ளையின் தாய் போல வந்த அதிகாரியிடம் சிக்கிய அதிபர்: லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விளக்க மறியல் 0

🕔29.Jan 2022

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (28) கைது செய்யப்பட்ட பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாணந்துறை மேலதிக நீதவான் இந்த உத்தரவை இன்று (29) பிறப்பித்துள்ளார். 150,000 ரூபாவை லஞ்சமாகப் பெற முற்பட்ட போதே அதிபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். லஞ்ச,

மேலும்...
சம்மாந்துறை பாடசாலையில் திருடப்பட்ட பெறுமதியான பொருட்கள் மீட்பு: சந்தேக நபர்களும் அகப்பட்டனர்

சம்மாந்துறை பாடசாலையில் திருடப்பட்ட பெறுமதியான பொருட்கள் மீட்பு: சந்தேக நபர்களும் அகப்பட்டனர் 0

🕔25.May 2021

– நூருல் ஹுதா உமர் – சம்மாந்துறை அல் – அர்ஷாத் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரை, கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பாடசாலை அலுவலகத்தில் இருந்த பொருட்கள் கடந்த 18ஆம் திகதி திருடப்பட்டுள்ளதாக

மேலும்...
பாடசாலைகள் மே 11 ஆரம்பம்; பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில் தீர்மானமில்லை

பாடசாலைகள் மே 11 ஆரம்பம்; பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில் தீர்மானமில்லை 0

🕔12.Apr 2020

அனைத்து பாடசாலைகளைகளையும், இரண்டாம் தவணைக்காக, மே மாதம் 11ஆம் திகதி, திங்கட்கிழமை, தொடங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என, அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னர் – இரண்டாம் தவணை, ஏப்ரல் 20ஆம் திகதி தொடங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. கொரோனா நோய்க்கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளின் முதற்கட்டமாகப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை மாணவர்களின் பாதுகாப்பை

மேலும்...
வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கைக்கு மட்டுப்பாடு விதிக்கப்படும்; கல்வியமைச்சர் தெரிவிப்பு

வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கைக்கு மட்டுப்பாடு விதிக்கப்படும்; கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔17.Jun 2017

பாடசாலையின் வகுப்பறையொன்றில் 35 மாணவர்கள் மட்டுமே இருக்கலாமென வரையறுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று வருடங்களுக்குள் இந்த வரையறை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். பதுளையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சில பாடசாலைகளில் வகுப்பொன்றில் 40 மாணவர்கள் வரை உள்ளனர் என்பது

மேலும்...
பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனையை தடைசெய்யும் சட்டம் வருகிறது:  சுகாதார அமைச்சர்

பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனையை தடைசெய்யும் சட்டம் வருகிறது: சுகாதார அமைச்சர் 0

🕔19.Apr 2017

பாடசாலைகளுக்கு அருகாமையில் சிகரட் விற்பனை செய்வதைத் தடுக்கும் சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாடசாலைகளிலிருந்து 500 மீற்றர் தூரத்துக்குள் சிகரட் விற்பனையினை, இந்தச் சட்டத்தின் மூலம் தடுக்கவுள்ளதாக அமைச்சர் விபரித்துள்ளார். ஏற்கனவே, உதிரிகளாக சிகரட்டுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமையினை அடுத்து,

மேலும்...
பாடசாலை மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தடை

பாடசாலை மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தடை 0

🕔28.Feb 2017

பாடசாலை நேரத்தில் மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தக் கூடாதென, கல்வியமைச்சு அறிவித்துள்ளது. சுற்றறிக்கையொன்றினூடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவையற்ற விதத்தில் அனுமதியின்றி வெளிநபர்கள் பாடசாலைக்குள் உள்நுழைவதை தடைசெய்யுமாறும் குறித்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில் பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு எதிராகப் பதிவாகிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, கல்வியமைச்சின் செயலாளர் மேற்படி சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
நாளை பாடசாலை இல்லை; கல்வியமைச்சு அறிவிப்பு

நாளை பாடசாலை இல்லை; கல்வியமைச்சு அறிவிப்பு 0

🕔19.May 2016

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள 22 மாவட்டங்கள், சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெள்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
மாத்திரை உட்கொண்ட மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில்

மாத்திரை உட்கொண்ட மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் 0

🕔4.Mar 2016

– க. கிஷாந்தன் – பண்டாரவளை – பூணாகலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வழங்கப்பட்ட விற்றமின் மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வாமை காரணமாக வாந்தி, மயக்கம் போன்றவற்றால் நேற்று வியாழக்கிழமை 93 மாணவர்கள் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எவ்வாறாயினும் மாணவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...
பாடசாலைகளில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து

பாடசாலைகளில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து 0

🕔19.Nov 2015

பாடசாலைகளுக்குள் கடமை நேரத்தில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்வதற்கு, ஊவா மாகாண முதலமைச்சர் விதித்த தடையானது, நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளுக்கும் ஏற்புடையதாகாது என்று, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஊவா மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள், தமது கடமை நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்கு, அந்த மாகாண முதலமைச்சர் அண்மையில் தடை விதித்திருந்தார்.

மேலும்...
சீருடைக்குப் பதிலாக வவுச்சர் முறை; 500 மில்லியன் ரூபாய் சேமிக்கப்படும் என்கிறார் கல்வி அமைச்சர்

சீருடைக்குப் பதிலாக வவுச்சர் முறை; 500 மில்லியன் ரூபாய் சேமிக்கப்படும் என்கிறார் கல்வி அமைச்சர் 0

🕔19.Nov 2015

மாணவர்களுக்கு தரமற்ற சீருடைத் துணிகள் வழங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே, அவர்களுக்கு சீருடைகளை நேரடியாக வழங்காமல், அதற்குப் பதிலாக வவுச்சர் வழங்க தீர்மானித்ததாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். அதேவேளை, இடைத்தரகர்கள் கொமிஷன் பெறுவதைத் தவிர்ப்பதற்காகவும், வவுச்சர் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் சுமார் 500 மில்லியன் ரூபாய் வரை சேமித்து அவற்றை கல்வி வளர்ச்சிக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்