பெற்றோல் விலை கூடியது; டீசல், மண்ணெண்ணெய் விலைகள் குறைந்தன: நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்

பெற்றோல் விலை கூடியது; டீசல், மண்ணெண்ணெய் விலைகள் குறைந்தன: நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல் 0

🕔31.Jul 2023

எரிபொருள்களின் விலைகளில் இன்று இன்று நள்ளிரவு தொடக்கம் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 348 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல்

மேலும்...
‘அஸ்வெசும’வுக்கு தெரிவாகாத சுமார் 04 லட்சம் பேருக்கு, தொடர்ந்தும் சமுர்த்தி உதவி வழங்க தீர்மானம்

‘அஸ்வெசும’வுக்கு தெரிவாகாத சுமார் 04 லட்சம் பேருக்கு, தொடர்ந்தும் சமுர்த்தி உதவி வழங்க தீர்மானம் 0

🕔31.Jul 2023

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதியற்ற 393,094 சமுர்த்தி பெறுநர்களுக்கான சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது சமுர்த்திப் பலன்களைப் பெற்றுக்கொண்டிருக்கும் 1,280,000 குடும்பங்கள் அஸ்வசும நலன்புரிப் பலன்களுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் 887,653 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி

மேலும்...
நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை இவ்வருடம் 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது

நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை இவ்வருடம் 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது 0

🕔31.Jul 2023

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை – இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 56,000ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் – மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். அதேவேளை கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் கணிசமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என –

மேலும்...
பாடசாலைகளில் கைத்தொலைபேசிப் பயன்பாடு அதிகரிப்பு: மாணவர்களுக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை

பாடசாலைகளில் கைத்தொலைபேசிப் பயன்பாடு அதிகரிப்பு: மாணவர்களுக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை 0

🕔31.Jul 2023

பாடசாலைகளில் கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப கருவிகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக, மாணவர்கள் செயன்முறை கல்வியில் இருந்து விலகும் அபாயம் காணப்படுகிறது என்று,   மனநல மருத்துவ நிபுணர்  ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம் போசும்போதே அவர் இதனைக் கூறினார். அடிமையாதல் மற்றும் மாணவர்களின் மனநலம் பாதிக்கப்படுதை கருத்தில் கொண்டே பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி

மேலும்...
நீதிபதி அல்ஹாபிழ் அப்துல்லாஹ் முதுமாணி பட்டம் பெற்றார்

நீதிபதி அல்ஹாபிழ் அப்துல்லாஹ் முதுமாணி பட்டம் பெற்றார் 0

🕔31.Jul 2023

– ஐ.எல்.எம். றிஸான்- மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துல்லாஹ் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் குற்றவியல் நியாயமும் நிர்வாகமும் (Criminal Justice Administration) துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார். இதற்கான பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நீதிபதி அப்துல்லாஹ், அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி மற்றும் சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம்

மேலும்...
கிழக்கு ஆளுநருக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்

கிழக்கு ஆளுநருக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் 0

🕔30.Jul 2023

கல்முனையிலிருந்து திருகோணமலைக்கு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சில தனியார் பஸ்களின் அனுமதிப் பத்திரங்களை அக்கரைப்பற்று வரையில் – போக்குவரத்தில் ஈடுபடும் வகையில் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை காரணமாக – பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, தென்கிழக்கு கரையோரப் பிரதேச பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் முதலமைச்சின்

மேலும்...
பாகிஸ்தானில் அரசாங்க கூட்டணி கட்சிக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 40 பேர் பலி: 200க்கும் அதிகமானோர் காயம்

பாகிஸ்தானில் அரசாங்க கூட்டணி கட்சிக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 40 பேர் பலி: 200க்கும் அதிகமானோர் காயம் 0

🕔30.Jul 2023

பாகிஸ்தானில் அரசியல் கட்சியின் பொதுக் கூட்டத்தில் இன்று (30) நடந்த குண்டுத் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் வடமேற்கு பஜௌர் மாவட்டத்தில் ஜம்மியத் – உலமா – இ – இஸ்லாம் – ஃபாஸ்ல் (JUIF) என்ற கட்சி நடத்திய பொதுக் கூட்டத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜாமியத்-உலமா-இ-இஸ்லாம்-ஃபாஸ்ல்

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி 0

🕔30.Jul 2023

கொழும்பு – வாழைத்தோட்டம் மார்டிஸ் வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் – வீதியோரத்தில் நின்றிருந்த நபர் மீது ரி56 துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்

மேலும்...
கொழும்பில் இருந்து சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் இருந்து சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔30.Jul 2023

கொடகவெல – கலஹிட்டிய பகுதியில் ,இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பயணிகள் காயமடைந்து கஹவத்தை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று காலை வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது பேருந்தில் 54 பேர் பயணித்துள்ளதாகவும் சாரதி மற்றும் நடத்துனரை பொலிஸார் கைது

மேலும்...
நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள், குறைந்தபட்ச கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள், குறைந்தபட்ச கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு 0

🕔30.Jul 2023

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டிலுள்ள எரிபொருள் நிரம்பும் நிலையங்கள் தமது கையிருப்பை பேணத் தவறியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அந்த வயைில் 92 ஒக்டேன் பெற்றோலினை 101 எரிபொருள் நிலையங்களும் லங்கா ஓட்டோ டீசலினை 61 எரிபொருள் நிலையங்களும் 50 வீதம் கையிருப்பை நேற்றைய

மேலும்...
ஜனாதிபதி ரணில் – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: முக்கிய விடயங்கள் குறித்தும் அலசல்

ஜனாதிபதி ரணில் – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: முக்கிய விடயங்கள் குறித்தும் அலசல் 0

🕔29.Jul 2023

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (HAYASHI Yoshimasa) இன்று (29) கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்து இந்தக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டதுடன், பல்வேறு துறைகளில் அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு

மேலும்...
மன நோயாளியின் மரணம் தொடர்பில், உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது

மன நோயாளியின் மரணம் தொடர்பில், உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது 0

🕔28.Jul 2023

முல்லேரியாவில் உள்ள தேசிய மனநல சுகாதார நிறுவகத்தின் உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்டுள்ளனர். தேசிய மனநல சுகாதார நிறுவகத்தில் நோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் இவர்கள் கைதாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நோயாளியொருவரை – மேற்படி இரண்டு சுகாதாரப் பணியாளர்களும் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த நோயாளி

மேலும்...
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைகலப்பு: இருவரும் வைத்தியசாலைகளில் அனுமதி

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைகலப்பு: இருவரும் வைத்தியசாலைகளில் அனுமதி 0

🕔28.Jul 2023

– அஹமட் – அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் இருவர் – கைகலப்பில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் இருவரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை 11 மணியளவில் பாடசாலையினுள் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த ஆசிரியர்களில் ஒருவர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையிலும், மற்றொருவர் பாலமுனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த ஆசிரியர்கள் இருவருக்கும் இடையில்

மேலும்...
அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை சந்தேக நபர்களுக்கு பிணை

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை சந்தேக நபர்களுக்கு பிணை 0

🕔28.Jul 2023

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் 32 சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களுக்கு கம்பஹா நீதிமன்ற மூவரடங்கிய ட்ரயல் அட்-பார் நீதிமன்றத்தினால் கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது சந்தேக நபர்கள் ஒவ்வொருவரையும் 01 லட்சம் ரூபா

மேலும்...
ஆசிரியரைத் தாக்கிய அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்களை, சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் 14 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு

ஆசிரியரைத் தாக்கிய அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்களை, சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் 14 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு 0

🕔28.Jul 2023

– அஹமட் – அட்டாளைச்சேனை தேசிய பாடசலையின் ஆசிரியர் ரி. கோகுலவாசன் மீது தாக்குதல் மேற்கொண்ட, அந்த பாடசாலை மாணவர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் அமைந்துள்ள சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் 14 நாட்கள் தடுத்து வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் (27) நீதிமன்றில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்