வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கைக்கு மட்டுப்பாடு விதிக்கப்படும்; கல்வியமைச்சர் தெரிவிப்பு

🕔 June 17, 2017

பாடசாலையின் வகுப்பறையொன்றில் 35 மாணவர்கள் மட்டுமே இருக்கலாமென வரையறுக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று வருடங்களுக்குள் இந்த வரையறை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

பதுளையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சில பாடசாலைகளில் வகுப்பொன்றில் 40 மாணவர்கள் வரை உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதிகமாக மாணவர்களைக் கொண்டுள்ள வகுப்பறையில், அனைத்து மாணவர்களையும் ஆசிரியரின் கற்பித்தல் சென்றடைவதில் சிக்கல்கல் காணப்படுவதாக சுட்டிக் காட்டப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்