48 கஞ்சா சுருட்டுக்களை வைத்திருந்தவர், ஒலுவில் பிரதேசத்தில் கைது 0
– அஹமட் – ஒலுவில் பிரதேசத்தில் நபரொருவரை 48 கஞ்சா சுருட்டுக்களுடன் அக்கரைப்பற்று பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை கைது செய்தனர். சந்தேக நபர் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்தவாராவர். கைது செய்யப்பட்டவர் தற்போது அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை நாளை புதன்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.