பாடசாலை சத்துணவு திட்டத்துக்காக, இரண்டு மாதங்களுக்கு 240 கோடி ரூபா செலவு

🕔 January 31, 2023

பாடசாலை சத்துணவுத் திட்டத்தின் கீழ், கடந்த வருடம் நொவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்காக – மாகாண மட்டத்தில் உணவு வழங்குநர்களுக்கு 2.4 பில்லியன் (240 கோடி) ரூபாவை அரசு வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி மேல் மாகாணம் 39 கோடி 94 லட்சத்து 18.220 ரூபா, மத்திய மாகாணம் ரூ. 26 கோடி 99 லட்சம் ரூபா, கிழக்கு மாகாணம் 35 கோடி ரூபா, வட மத்திய மாகாணம் ரூ. 25 கோடி 60 லட்சம் ரூபா, வடமேல் மாகாணம் ரூ. 22 கோடி 10 லட்சம் ரூபா, வட மாகாணம் ரூ. 16 கோடி 40 லட்சத்து 50,718 ரூபா மற்றும் சப்ரகமுவ மாகாணம் ரூ. 18 கோடி 29 லட்சத்து 93,773 ரூபா நிதியைப் பெற்றுள்ளன.

அந்த வகையில் உணவு வழங்குநர்களுக்கு செலுத்த வேண்டிய பணம் நேற்று முதல் மாகாண கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

உணவு வழங்குனர்களுக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்