எரிபொருள்களின் விலைகள் குறைந்தன

🕔 May 1, 2024

லங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்ற (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைத்துள்ளது.

அந்த வகையில் ஒக்டேன் 92 பெற்றோலின் விலை லீட்டருக்கு 03 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 368 ரூபாய்.

ஒக்டேன் 95 பெற்றோல் லீட்டருக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 420 ரூபாயாகும்..

ஓட்டோ டீசலுக்கு 30 ரூபாய் குறைக்கப்பட்டு, புதிய விலை 333 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேளை சூப்பர் டீசலுக்கு 09 ரூபாய் குறைக்கப்பட்டமையால், புதிய விலை 377 ஆக அமைந்துள்ளது.

இதேவேளை மண்ணெண்ணெய் விலையும் லீட்டருக்கு 30 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதால், புதிய விலை 215 ரூபாயாக மாற்றமடைந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்