
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ களமிறங்குவார் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மறைந்த ரி.பி. இலங்கரத்ன நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
விஜேயதாச ராஜபக்ஷவுக்கு கட்சியில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்ட மைத்திரிபால சிறிசேன்; “நான் ஜனாதிபதியாக பதவி வகித்த போது, மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று உறுதியளித்தேன். விஜயதாச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார், நாங்கள் அவருக்கு முழுமையாக ஆதரவளிப்போம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ”ஆளும் கட்சியிலிருந்து ஒரு அமைச்சரைப் பெற்றோம். அவர் இப்போது எங்களுடன் இணைந்துள்ளார். அவர் இனி அமைச்சர் பதவிக்கு ஆசைப்படமாட்டார்” எனவும் மைத்திரிபல சிறிசேன மேலும் தெரிவித்தார்.



