
2025 ஒக்டோபர் 30 முதல் 2026 ஓகஸ்ட் 12 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்களை, பொலிஸார் அழித்துள்ளனர் என, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தக் காலகட்டத்தில் கைப்பற்றப்பட்டவற்றில் பின்வரும் போதைப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
– 2,259 கிலோ மற்றும் 129 கிராம் ஹெரோயின்
– 2,653 கிலோ மற்றும் 245 கிராம் ஐஸ் எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்.
– 293 கிலோ மற்றும் 755 கிராம் கொக்கைய்ன்
சட்ட நடவடிக்கைகள் முடிவடைந்த வழக்குகளுடன் தொடர்புடைய போதைப்பொருட்கள், புத்தளம், வண்ணத்திவில்லுவில் உள்ள ‘லத்தோ வத்த’ வளாகத்தில் அமைந்துள்ள உயர் வெப்பநிலையில் அழிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அகற்றுவதற்கான நிறுவப்பட்ட நடைமுறையின் ஒரு பகுதியாக இவை அழிக்கப்பட்டன.



