சம்மாந்துறை பாடசாலையில் திருடப்பட்ட பெறுமதியான பொருட்கள் மீட்பு: சந்தேக நபர்களும் அகப்பட்டனர்

🕔 May 25, 2021

– நூருல் ஹுதா உமர் –

ம்மாந்துறை அல் – அர்ஷாத் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரை, கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாடசாலை அலுவலகத்தில் இருந்த பொருட்கள் கடந்த 18ஆம் திகதி திருடப்பட்டுள்ளதாக 19ம் திகதி பாடசாலை அதிபரினால் சம்மாந்துறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து ,போதைப்பொருளுக்கு அடிமையான 21, 23, 25 வயதான மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டதோடு, திருடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றி இருந்தனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே. சதீஸ்கரண், தலைமையில் இந்த திருட்டுச் மபவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

போட்டோ கொப்பி இயந்திரம், கணினி பாகங்கள், கணினி திரை, கைவிரல் அடையாளமிடும் இயந்திரம், ஒலிபெருக்கி சாதனங்கள், உடல் வெப்பநிலை அளவிடும் கருவி உட்பட பல பொருட்கள் திருடப்பட்டிருந்த நிலையில் அவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே. சதீஸ்கரண் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்