நாளை பாடசாலை இல்லை; கல்வியமைச்சு அறிவிப்பு

🕔 May 19, 2016

Ministry - Education - 099நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள 22 மாவட்டங்கள், சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெள்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்