பாடசாலை மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தடை

🕔 February 28, 2017

பாடசாலை நேரத்தில் மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தக் கூடாதென, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

சுற்றறிக்கையொன்றினூடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேவையற்ற விதத்தில் அனுமதியின்றி வெளிநபர்கள் பாடசாலைக்குள் உள்நுழைவதை தடைசெய்யுமாறும் குறித்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலங்களில் பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு எதிராகப் பதிவாகிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, கல்வியமைச்சின் செயலாளர் மேற்படி சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்