ரவிக்கு எதிராக, மஹிந்த கையொப்பமிடவில்லை; உதய கம்மன்பில

ரவிக்கு எதிராக, மஹிந்த கையொப்பமிடவில்லை; உதய கம்மன்பில 0

🕔30.Nov 2015

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  மஹிந்த ராஜபக்ஷ  கையொப்பமிடவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பிவிதுரு ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அந்தக் கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில இந்த விடயத்தினைக் கூறினார்.முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
வரவு – செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீர்மானம்; வாகன விலைகள் குறையவும் சாத்தியம்

வரவு – செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீர்மானம்; வாகன விலைகள் குறையவும் சாத்தியம் 0

🕔29.Nov 2015

அமைச்சர் ரவி கருணாநாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2016ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது.வரவு – செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களுக்கு எதிர்க்கட்சிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பாரிய எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதுடன், அரசுக்குள்ளும் இது தொடர்பில் இரு வேறு கருத்துகள் நிலவுவதாகத் தெரியவருகிறது.இதனால் வரவு – செலவுத்திட்டத்தில் சிறு மாற்றங்களை மேற்கொள்ள பிரதமர்

மேலும்...
காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு 0

🕔29.Nov 2015

– க. கிஷாந்தன் – காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த நிலையில் யுவதியின் சடலம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொது மக்களால் மீட்கப்பட்டதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த மோகனராஜ் பிரியந்தினி எனும் 20 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த யுவதி, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு வேளையில் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், இது

மேலும்...
Knowledge Force International நிறுவனத்தின் மாபெரும் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பம்

Knowledge Force International நிறுவனத்தின் மாபெரும் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பம் 0

🕔28.Nov 2015

– எம்.வை. அமீர் – Knowledge Force International நிறுவனத்தின் மாபெரும் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டலும் புத்தக் கண்காட்சியையும் நேற்று சாய்ந்தமருதுலீ மெரீடியன் வரவேற்பு மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக இவ்வாறாதொரு மாபெரும் கண்காட்சி இடம்பெறுவது இதுவே முதன் முறையாகும். Knowledge Force நிறுவனத்தின் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சியானது, கல்முனை

மேலும்...
குண்டு துளைக்காத கார் வேண்டும்; மைத்திரியிடம் மஹிந்த கோரிக்கை

குண்டு துளைக்காத கார் வேண்டும்; மைத்திரியிடம் மஹிந்த கோரிக்கை 0

🕔28.Nov 2015

குண்டு துளைக்காத கார் ஒன்றை தனக்கு வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. தொலைபேசியினூடாக ஜனாதிபதியிடம், இந்தக் கோரிக்கையினை மஹிந்த முன்வைத்துள்ளார். விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டு வருவதால், தனக்கு குண்டு துளைக்காத கார் ஒன்று இருக்க வேண்டும் என மகிந்த ராஜபக்ஷ கோரியதாக தெரியவருகிறது. தற்போதைய

மேலும்...
வாஸ் தொடர்பில் வெளியிட்ட கருத்தை மீளப் பெற்றுக் கொள்வதாக, வர்த்தகர் சியாமின் தந்தை தெரிவிப்பு

வாஸ் தொடர்பில் வெளியிட்ட கருத்தை மீளப் பெற்றுக் கொள்வதாக, வர்த்தகர் சியாமின் தந்தை தெரிவிப்பு 0

🕔28.Nov 2015

தனது மகன் சியாமின் கொலையில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று, தான் தெரிவித்த கருத்தை மீளப்பெறுவதாக சியாமின் தந்தை இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார். மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன குற்றவாளி இல்லை எனவும், அவர் மேல் முறையீடு செய்தால் இது தொடர்பில்

மேலும்...
ஊடகவியலாளர் பாறூக் ஷிஹானின் தந்தைக்கு, சிறப்பான மறுவாழ்வு கிடைக்க பிரார்த்தனைகள்

ஊடகவியலாளர் பாறூக் ஷிஹானின் தந்தைக்கு, சிறப்பான மறுவாழ்வு கிடைக்க பிரார்த்தனைகள் 0

🕔27.Nov 2015

ஊடகவியலாளர் பாறூக் ஷிஹானின் தந்தையார் தாஸி ஹசன் முகம்மட் பாறூக், தனது 63 ஆவது வயதில் நேற்று வபாத்தானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. சுகயீனம் காரணமாக கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருத்த நிலையிலேயே, அன்னார் வபாத்தாகியதாக அறிய முடிகிறது. வபாத்தான அந்த சகோதரரின் மறுமை வாழ்வு சிறப்பாகவும், அன்னாருக்கு ஜென்னதுல் பிர்தௌஸ் எனும்

மேலும்...
அமைச்சர் ஹக்கீம் ஏற்பாட்டில், கண்டி நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான சந்திப்பு

அமைச்சர் ஹக்கீம் ஏற்பாட்டில், கண்டி நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான சந்திப்பு 0

🕔27.Nov 2015

வெளிநாட்டு நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள கண்டி மாநகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான அமைச்சர்கள் மட்ட சந்திப்பொன்று, நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றக் கட்டிடத்தில் இடம்பெற்றது. அமைச்சரும், மு.கா. தலைவருமான ரஊப் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்த இந்தச் சந்திப்பில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியல்ல, மலிக் சமரவிக்ரம, எம்.எச்.ஏ.ஹலீம், சரத் அமுனுகம உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும்...
வாஸ் குற்றவாளியில்லை, சாட்சி சொல்லவும் தயார்; சியாமின் தந்தை தெரிவிப்பு

வாஸ் குற்றவாளியில்லை, சாட்சி சொல்லவும் தயார்; சியாமின் தந்தை தெரிவிப்பு 0

🕔27.Nov 2015

வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன குற்றவாளி இல்லை என, கொலை செய்யப்பட்ட சியாமின் தந்தை தெரிவித்துள்ளதாக ‘ஹிரு’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. வாஸ் குணவர்த்தன மேல் முறையீடு செய்தால், தாம் சாட்சி வழங்க தயார் என்று சியாமின் தந்தை தெரிவித்ததாகவும் அந்த இணையத்தளம்

மேலும்...
கண்ணாடி ஏற்றிவந்த லொறி குடைசாய்ந்ததில், உதவியாளர் படுகாயம்

கண்ணாடி ஏற்றிவந்த லொறி குடைசாய்ந்ததில், உதவியாளர் படுகாயம் 0

🕔27.Nov 2015

– க. கிஷாந்தன் – நுவரெலியா – பதுளை பிரதான வீதியிலுள்ள ஹக்கல தபால் நிலையத்திற்கு அருகாமையில் லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த உதவியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்தது. கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி கண்ணாடிகளை ஏற்றிச்சென்ற லொறியொன்றே இவ்வாறு குடைசாய்ந்தது. லொறியில் சாரதியுடன், உதவியாளர் ஒருவரும் பயணித்திருந்தார். விபத்தின்போது

மேலும்...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக வழக்கு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக வழக்கு 0

🕔27.Nov 2015

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் 05 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அவருடைய வருமானங்கள் மற்றும் சொத்து விபரங்களை 2010ம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வழங்க தவறியமைக்கு எதிராகவே, அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும்...
பொதுநலவாய நாடுகளின் மாநாடு இன்று ஆரம்பமானது

பொதுநலவாய நாடுகளின் மாநாடு இன்று ஆரம்பமானது 0

🕔27.Nov 2015

பொதுநலவாய நாடுகளின் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மொல்டாவில் ஆரம்பமானது. பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவரும், இலங்கை ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவும் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் பெற்றுக் கொண்டுள்ள 53 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்களை, தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் அவரின் பாரியாரும் வரவேற்றனர். அத்துடன், பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர்

மேலும்...
சியாம் கொலை வழக்கு; முன்னாள் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட ஆறுபேருக்கு மரண தண்டனை

சியாம் கொலை வழக்கு; முன்னாள் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட ஆறுபேருக்கு மரண தண்டனை 0

🕔27.Nov 2015

பம்பலப்பிட்டியைச் சேர்ந்த வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பினை வழங்கியது. குறித்த வழங்கில் குற்றவாளிகளாக வாஸ் குணவர்தன, அவருடைய மகன் ரவிந்து குணவர்தன மற்றும் ஏனைய நால்வர்

மேலும்...
தந்தை கொலை; 15 வயது மகன் கைது

தந்தை கொலை; 15 வயது மகன் கைது 0

🕔27.Nov 2015

– க. கிஷாந்தன் – பதுளை மாவட்டம் ஹாலிஎல, உனுகல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தனது தந்தையை தாக்கி, கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக, ஹாலிஎல பொலிஸார் கூறினார். குடும்ப பிரச்சினையே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில்

மேலும்...
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக மன்சூர் நியமனம்

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக மன்சூர் நியமனம் 0

🕔27.Nov 2015

– முன்ஸிப் – அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் நியமிக்கபட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்நியமனத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த எம்.ஐ.எம். மன்சூர், கடந்த பொதுத் தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பில்

மேலும்...