Back to homepage

மேல் மாகாணம்

சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தம் குறித்து அறிவிக்கவும்: பாதுகாப்பு அமைச்சு

சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தம் குறித்து அறிவிக்கவும்: பாதுகாப்பு அமைச்சு 0

🕔15.May 2016

சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 0112434251 எனும் இலக்கத்தினூடாக இலங்கை ராணுவத்தினருக்கு, தகவல் வழங்க முடியும். அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்காக தகவல்களை கோருவதாக பாதுகாப்பு  அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, அனர்த்தம் ஏற்படும் போது 0112445368 என்ற இலக்கத்தினூடாக இலங்கை கடற்படையினருக்கும், 0112343970 என்ற இலக்கத்தினூடாக விமானப் படையினருக்கும் தகவல்களை வழங்க முடியும்

மேலும்...
பொது எதிர்க்கட்சினருக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை; மஹிந்தவை ஓரங்கட்டப் போவதாகவும் தெரிவிப்பு

பொது எதிர்க்கட்சினருக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை; மஹிந்தவை ஓரங்கட்டப் போவதாகவும் தெரிவிப்பு 0

🕔15.May 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் செயற்படாவிட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொது எதிர்க்கட்சியினர் இணக்கப்பாட்டுடன் போட்டியிட முடியாவிட்டால், தனது தரப்பினரை அன்னப் பறவை சின்னத்தில் களமிறங்கி மஹிந்தவை ஓரங்கட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது. இந்திய விஜயத்தை

மேலும்...
ஜனாதிபதி நாடு வந்தடைந்தார்

ஜனாதிபதி நாடு வந்தடைந்தார் 0

🕔15.May 2016

பிரித்தானியா சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று சனிக்கிழமை இரவு நாடு திரும்பினார். யு.எல். 172 எனும் விமானம் மூலம் பெங்ளுரிலிருந்து ஜனாதிபதி நாட்டுக்குப் புறப்பட்டார். இந்தியாவிலுள்ள சான்ஜி விகாரையில் நேற்றைய தினம் அநகாரிக தர்மபாலவின் சிலை திறப்பு நிகழ்வொன்றில் ஜனாதிபதி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை; மு.கா. செயலாளர் ஹசன் அலி தெரிவிப்பு

கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை; மு.கா. செயலாளர் ஹசன் அலி தெரிவிப்பு 0

🕔15.May 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அதேவேளை கட்சியிலிருந்து தான் ராஜிநாமா செய்யப்போவதில்லை என்றும் அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கும், செயலாளர் ஹசன் அலிக்குமடையில் தோன்றியுள்ள பிளவு குறித்து கருத்து வெளியிடும் போதே, மேற்கண்ட விடயத்தைக் கூறியுள்ளார். கட்சிக்குள் உள்ளவர்களுடன் ஆலோசிக்காமல், மு.கா. தலைவர்

மேலும்...
பாதாள உலகத் குழுத் தலைவர் ஆமி சம்பத் கைது

பாதாள உலகத் குழுத் தலைவர் ஆமி சம்பத் கைது 0

🕔14.May 2016

பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான ஆமி சம்பத் இன்று சனிக்கிழமை பகல் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு குற்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இவர், நீண்ட காலமாகத் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ஆமி சம்பத் கைதானார். கொழும்பு கொம்பனித் தெருவில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.

மேலும்...
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் மேர்வின் சில்வா

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் மேர்வின் சில்வா 0

🕔14.May 2016

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று சனிக்கிழமை ஆஜராகியுள்ளார். கிரிபத்கொட பிரதேச காணிப்பிரச்சினை ஒன்று சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவிடமும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு வாக்குமூலம்

மேலும்...
பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு செய்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்கல்வி அமைச்சர்

பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு செய்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்கல்வி அமைச்சர் 0

🕔14.May 2016

பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை குறித்து முறைப்பாடு செய்யப்படும் போது, அது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பகிடிவதைக்கு எதிரான சட்டம் மிகச் சரியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் பகிடிவதை தடை செய்யப்பட்டுள்ளது. பகிடிவதைக்காக மாணவர்களுக்கு

மேலும்...
மஹிந்தவின் உகண்டா பயணத்துக்கு, அரசாங்கம் செலவு; எழுகிறது விமர்சனம்

மஹிந்தவின் உகண்டா பயணத்துக்கு, அரசாங்கம் செலவு; எழுகிறது விமர்சனம் 0

🕔13.May 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உகண்டா பயணத்துக்கான செலவினை அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உகண்டா ஜனாதிபதி முசோவெனியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது நெருங்கிய அரசியல்வாதிகள் சிலர் உகண்டாவுக்கு சென்றுள்ளனர். இதற்காக முன்னாள் ஜனாதிபதியின் விமானப் பயணத்துக்கான செலவினை அரசாங்கம் வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அந்தரங்க

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டம்; நிதியமைச்சுடன் பேசியுள்ளதாக, ஊடக அமைச்சர் தெரிவிப்பு

ஊடகவியலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டம்; நிதியமைச்சுடன் பேசியுள்ளதாக, ஊடக அமைச்சர் தெரிவிப்பு 0

🕔13.May 2016

– அஸ்ரப் ஏ சமத் – ஊடகவியலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தினை நிர்மாணிப்பதற்கும் நிதியமைச்சரின் உதவியினை நாடியுள்ளதாக ஊடக அமைச்சா் ஜயந்த கருநாதிலக்க தெரிவித்தார். ஊடக அமைச்சினால் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் பைக் வழங்கும் திட்டத்தின் கீழ், 25 ஊடகவியலாளா்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை மோட்டார் பைக்கள் வழங்கி வைக்கப்பட்டன. இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஊடக

மேலும்...
முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் வீடு சோதனை; பணச் சலவை தொடர்பான ஆவணங்கள் சிக்கின

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் வீடு சோதனை; பணச் சலவை தொடர்பான ஆவணங்கள் சிக்கின 0

🕔13.May 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவின் பொரளை வீடு நேற்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் சோதனை இடப்பட்டது. கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த சோதனை இடம்பெற்றது. சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்,  சஜின் வாஸின் வீட்டிலிருந்து பணச் சலவை தொடர்பான பல ஆவணங்களை தம்முடன்எடுத்துச் சென்றுள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ்,

மேலும்...
வெளிநாட்டில் இருப்பதால் வர முடியாது; பஷிலின் மனைவி, மகள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

வெளிநாட்டில் இருப்பதால் வர முடியாது; பஷிலின் மனைவி, மகள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு 0

🕔13.May 2016

பாரிய நிதி மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால், இன்று வெள்ளிக்கிழமை தம்மால் ஆஜராக முடியாது என, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா மற்றும் மகள் தேஜானி ஆகியோர் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர். வெளிநாட்டில் தாங்கள் இருப்பதனாலேயே, ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராக முடியாமல் உள்ளதாகவும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர். பாரிய நிதி மோசடிகளை விசாரிக்கும்

மேலும்...
மக்களை திசை திருப்பவே, பஷில் கைது செய்யப்பட்டார்: விமல் வீரவன்ச

மக்களை திசை திருப்பவே, பஷில் கைது செய்யப்பட்டார்: விமல் வீரவன்ச 0

🕔13.May 2016

அரசாங்கத்தின் குற்றங்களை மறைப்பதற்காகவும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவுமே பஷில்ல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைக் கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; “முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினால் நேற்று

மேலும்...
பஷில் ராஜபக்ஷ கைது; ஜனாதிபதி மற்றும் மஹிந்த நாட்டில் இல்லாத வேளையில் அதிரடி

பஷில் ராஜபக்ஷ கைது; ஜனாதிபதி மற்றும் மஹிந்த நாட்டில் இல்லாத வேளையில் அதிரடி 0

🕔12.May 2016

முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பிரதேசத்தில் காணி கொள்வனவின் போது மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஷில் ராஜபக்ஷ வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று காலை ஆஜராகியிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார். இதேவேளை, மாத்தறை நீதவான் நீதிமன்றில்

மேலும்...
வரி அதிகரிப்புக்கு எதிராக, விமல் வீரவன்ச அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

வரி அதிகரிப்புக்கு எதிராக, விமல் வீரவன்ச அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔11.May 2016

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை இன்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளார். பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி (NBT) ஆகிவற்றினை அரசாங்கம் அதிகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்துள்ளார். குறித்த வரிகள் அதிகரிக்கப்பட்டமையால், அரசியல்

மேலும்...
விடுதலைப் புலிகளை விடவும், முஸ்லிம் அடிப்படைவாதம் பயங்கரமானது: ஞானசார தேரர்

விடுதலைப் புலிகளை விடவும், முஸ்லிம் அடிப்படைவாதம் பயங்கரமானது: ஞானசார தேரர் 0

🕔11.May 2016

முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் ர­க­சி­ய­மான முறையில் எப்போதும் இல்லாதவாறு நாட்டில் செயற்­பட்டுக் கொண்­டி­ருப்பதாகவும், விடு­தலைப் புலிகள் அமைப்பின் செயற்­பாட்டை விடவும் அவை பயங்­க­ர­மா­னவை என்றும் பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர் தெரிவித்தார். மேலும், நாட்­டி­லுள்ள  பெருமளவான காணி­களை கட்­டா­ரி­லுள்ள இளவரசர்கள் கொள்வ­னவு செய்­துள்­ளனர் என்றும், அமைச்சர் பைஸர் முஸ்­தபா இதன் பின்­ன­ணி­யில் செயற்படுவதாகவும் ஞானசார தேரர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்