பஷில் ராஜபக்ஷ கைது; ஜனாதிபதி மற்றும் மஹிந்த நாட்டில் இல்லாத வேளையில் அதிரடி

🕔 May 12, 2016

Basil arrested - 012
மு
ன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் காணி கொள்வனவின் போது மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஷில் ராஜபக்ஷ வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று காலை ஆஜராகியிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார்.

இதேவேளை, மாத்தறை நீதவான் நீதிமன்றில் இவர் இன்று மாலை ஆஜர் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பஷில் ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் நாட்டில் இல்லாத நிலையில், இந்தக் கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்