பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் மேர்வின் சில்வா

🕔 May 14, 2016

Mervin Silva - 097முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று சனிக்கிழமை ஆஜராகியுள்ளார்.

கிரிபத்கொட பிரதேச காணிப்பிரச்சினை ஒன்று சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவிடமும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு வாக்குமூலம் பெற்றிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்