
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராக உள்ளதாக, அந்தக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்தக் கட்சினர் – ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பத்தரமுல்லையில் தமது கட்சியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் – ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், ஜூன் 18ம் திகதிக்குள் தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமா என வினவியபோது, அவருக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதை கட்சியே தீர்மானிக்கும் என்றார்.



