பாணுக்குள் எலி எச்சம்: 01 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதிகள் திரும்பப் பெறப்பட்டன

🕔 May 11, 2024

ப்பானில் பொதியிடப்பட்டு விற்பனைகக்கு அப்பப்பட்ட – பாண் பொதிகள் இரண்டில், எலியின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாண் பொதிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று, அதன் உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் உணவு திரும்பப் பெறுப்படுவது அரிதானதாகும். அது உயர்தர சுகாதாரத்தைக் கொண்ட நாடாகும்.

இந்த நிலையில் எலியின் எச்சங்கள் பாண் தயாரிப்புகளில் எவ்வாறு சென்றன என்பதை ஆராய்ந்து வருவதாக நிறுவனம் கூறியுள்ளது.

இதன்படி சுமார் 104,000 பாண் பொதிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

“எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தியதற்காக நாங்கள் ஆழ்ந்த மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்” என்று – குறித்த நிறுவனம் செவ்வாயன்று ஒரு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

டோக்கியோவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இந்தப் பாண்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

“எங்கள் தர மேலாண்மை அமைப்பை நாங்கள் பலப்படுத்துவோம், மீண்டும் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்வோம்,” என்றும் உற்பத்தி நிறுவனம் உத்தரவாதம் வழங்கியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்