தலைப்புச் செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலையில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு இடமாற்றம்; சுகாதார அமைச்சர் உறுதிப்படுத்தினார்

ல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட 09 முஸ்லிம் சுகாதார பெண் உதவியாளர்களையும், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளனர்.

இதனை இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளரும் – சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார்.

குறித்த பகுதியில் இனவாத செயற்பாடுகள் ஏற்பட்டு அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதையும், சுகாதார சேவையை அந்தப் பகுதியில் தடையின்றி வழங்கும் பொருட்டும் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதேவேளை, இந்த இடமாற்றங்களை வழங்கியமைக்காக – நாடாளுமன்றி, தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு நன்றி தெரிவித்தார்.