தலைப்புச் செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஏர்பஸ் விமானக் கொள்வனவு வழக்கில் பிணை கிடைத்தது

ஏர்பஸ் விமானக் கொள்வனவில் லஞ்சம் பெற்றார் எனும் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த – நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பான உண்மைகள் மற்றும் முன்வைக்கப்பட்ட வாதங்களை இன்று (30) பரிசீலித்ததன் பின்னர், நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

05 லட்சம் ரூபாய் காசுப் பிணையிலும், தலா 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணையிலும் – அவரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

ஆயினும், கிரிஷ் நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், நாமல் ராஜபக்ஷ, ஒக்டோபர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.