தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது: ரூபவாஹினியில் அதிக பணியாளர்களை நியமித்தாராம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு விசாரணை தொடர்பாக – வாக்குமூலம் வழங்குவதற்கு கெஹலிய ரம்புக்வெல்ல இன்று காலை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார்.

அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கையை விட அதிகமாக 06 பணியாளர்களை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நியமித்ததன் காரணமாக, அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பான விசாரணையின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, இவர் மற்றொரு குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.