கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை; மு.கா. செயலாளர் ஹசன் அலி தெரிவிப்பு

🕔 May 15, 2016

Hasan Ali - 097ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அதேவேளை கட்சியிலிருந்து தான் ராஜிநாமா செய்யப்போவதில்லை என்றும் அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கும், செயலாளர் ஹசன் அலிக்குமடையில் தோன்றியுள்ள பிளவு குறித்து கருத்து வெளியிடும் போதே, மேற்கண்ட விடயத்தைக் கூறியுள்ளார்.

கட்சிக்குள் உள்ளவர்களுடன் ஆலோசிக்காமல், மு.கா. தலைவர் ஹக்கீம் – உயர் பீடத்துக்குள் சில நியமனங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அந்தப் பத்திரிகைக்கு ஹசன் அலி, சுட்டிக் காட்டியுள்ளார்.

இதேவேளை, கட்சியின் ஆதரவினைப் பெற்றுக் கொள்ளாமல், கட்சி யாப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தலைவர் ஹக்கீம் தீர்மானம் மேற்கொண்டதாகவும் ஹசன் அலி கூறியுள்ளார்.

இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ள மு.கா. செயலாளர் ஹசன் அலி; முஸ்லிம் காங்கிரசை பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், கட்சியிலிருந்து – தான் ராஜிநாமா செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்