வரி அதிகரிப்புக்கு எதிராக, விமல் வீரவன்ச அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

🕔 May 11, 2016

Wimal - 085தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை இன்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளார்.

பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி (NBT) ஆகிவற்றினை அரசாங்கம் அதிகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வரிகள் அதிகரிக்கப்பட்டமையால், அரசியல் யாப்பின் பிரிவுகள் 12(1), 13(1), 14 (ஏ) மீறப்பட்டுள்ளதாக விமல் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்படி வரிகள் தொடர்பில் தற்போதுள்ள சட்டத்தை திருத்தாமலும், நாடாளுமன்றத்தின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளாமலும் அவற்றினை அதிகரிக்க முடியாது என்றும் தன்னுடைய மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த வரிகளின் அதிகரிப்பானது தனதும் பொதுமக்களினதும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் விமல் வீரவன்ச தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, வற் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரிகளை மக்களிடம் அதிக வீதத்தில் அறவிடும் செயற்பாட்டுக்கு இடைக்காலத் தடையொன்றினை விதிக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தன்னுடைய மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்