முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் வீடு சோதனை; பணச் சலவை தொடர்பான ஆவணங்கள் சிக்கின

🕔 May 13, 2016

Sajin vaas - 032முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவின் பொரளை வீடு நேற்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் சோதனை இடப்பட்டது.

கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த சோதனை இடம்பெற்றது.

சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்,  சஜின் வாஸின் வீட்டிலிருந்து பணச் சலவை தொடர்பான பல ஆவணங்களை தம்முடன்எடுத்துச் சென்றுள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ், 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் சொத்து விபரங்களை வெளியிடவில்லை எனத் தெரிவித்து, லஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்