Back to homepage

மேல் மாகாணம்

அமைச்சரவை மாற்றம்: பதவியிழக்கின்றனர் 05 அமைச்சர்கள்

அமைச்சரவை மாற்றம்: பதவியிழக்கின்றனர் 05 அமைச்சர்கள் 0

🕔3.Apr 2016

அமைச்சரவை மாற்றங்களின் போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள 05 அமைச்சர்கள் தமது பதவிகளை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ சீன விஜயத்தினை அடுத்து, அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. மேற்படி விஜயத்தின் பொருட்டு, எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை, பிரதமர் சீனாவில் தங்கியிருப்பார். இந்த

மேலும்...
தாய் – சேய் மரணம் இலங்கையில் குறைவடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

தாய் – சேய் மரணம் இலங்கையில் குறைவடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு 0

🕔2.Apr 2016

இலங்கையில் தாய் – சேய் மரணவீதம் குறைவடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஒரு இலட்சத்திற்கு 32 வீதமாக இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை ஏனைய பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இதுவாகும் என்று சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கர்ப்ப காலப்பகுதியில் அல்லது மகப்பேற்றின் பின்னரான 42 நாட்களுக்குள் அல்லது கர்ப்பிணிப்

மேலும்...
தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை 0

🕔2.Apr 2016

வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் இன்று சனிக்கிழமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்தார். சாவகச்சேரி பகுதியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் – வெள்ளவத்தைப் பகுதிக்கு கடத்திவருவதற்காக வைக்கப்பட்டிருந்தவை என்று, ஜீ.எல். பீரிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இதேவேளை, இந்த விடயத்தினை மூடி மறைப்பதற்கு அரசாங்கம்

மேலும்...
அதிகரிக்கப்பட்ட வற் வரி, இப்போதைக்கு இல்லை: அரசாங்கம் அறிவிப்பு

அதிகரிக்கப்பட்ட வற் வரி, இப்போதைக்கு இல்லை: அரசாங்கம் அறிவிப்பு 0

🕔1.Apr 2016

வற் வரியை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், அந்த நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.அரசாங்கத்தின் வருமான இழப்பு மற்றும் செலவீனங்களை ஈடு செய்யும் வகையில் வற் வரியை இரண்டரை வீதத்தினால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.தற்போது 11 வீதமாக அறவிடப்படும் வற் வரியினை, புதிய முறையின் கீழ் பதினைந்து வீதமாக அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.இந்த வரி அதிகரிப்பு,

மேலும்...
சுவாமிநாதனின் அமைச்சு அலுவலகத்துக்கு 30 லட்சம் வாடகை; செலுத்த முடியாது என, கணக்காளர் மறுப்பு

சுவாமிநாதனின் அமைச்சு அலுவலகத்துக்கு 30 லட்சம் வாடகை; செலுத்த முடியாது என, கணக்காளர் மறுப்பு 0

🕔1.Apr 2016

– அஷ்ரப் ஏ சமத் – அமைச்சர்  டி.எம். சுவாமிநாதனின் கீழ் இயங்கும் மீள்குடியோற்றம் ,சிறைச்சாலைகள் மற்றும் இந்து கலாச்சார அமைச்சின் அலுவலகம் ஒன்றுக்காக, தனியார் கட்டிடமொன்றுக்கு 30 லட்சம் ரூபாவினை வாடகையாகச் செலுத்தும் தீர்மானத்துக்கு, அந்த அமைச்சரின் கணக்காளர் ஏ.எம். மாஹிர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். கொள்ளுப்பிட்டியில் உள்ள LEEDONS BUILDERS PVT Lte எனும்

மேலும்...
சுதந்திரக் கட்சியிலிருந்து 10 பேர் நீக்கம்: கட்சி தீர்மானத்தை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சியிலிருந்து 10 பேர் நீக்கம்: கட்சி தீர்மானத்தை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு 0

🕔1.Apr 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பத்துப் பேர் கட்சியை விட்டும் நீங்கிக் கொண்டவர்களாக கருதப்படுவர் என்று, கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கட்சியின் ஒழுக்காற்று விதிகளை மீறியதாக தெரிவித்து குறிப்பிட்ட 10 பேருக்கு எதிராக ஒழுக்காற்றுக் குழு நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருந்தது.இதற்கிணங்க, கடந்த 29ம் திகதி விசாரணைக்காக ஒழுக்காற்றுக்

மேலும்...
தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸ் ஏன் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை; ரணில் கேள்வி

தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸ் ஏன் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை; ரணில் கேள்வி 0

🕔31.Mar 2016

வடக்கிலுள்ள வீடொன்றில் நேற்று புதன்கிழமை தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை குறித்து ஜீ.எல்.பீரிஸ் அறிந்திருப்பின், அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழக்கியிருக்கலாம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த வெடி பொருட்கள் வௌ்ளவத்தையிலுள்ள வீடொன்றுக்கு கொண்டு வர இருந்ததாக பீரிஸ் குறிப்பிட்டுள்ளதாகவும், அது பற்றி அவர் அறிந்திருப்பின் பொலிஸாரிடம் ஏன் சொல்லவில்லை எனவும் பிரதமர்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேட்கவில்லை: மு.கா. செயலாளர் ஹசனலி அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேட்கவில்லை: மு.கா. செயலாளர் ஹசனலி அறிவிப்பு 0

🕔31.Mar 2016

தேசி­யப்­பட்­டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேட்டு, கட்­சிக்கு – தான் அழுத்தம் கொடுப்பதாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் பிர­சா­ரங்கள் பொய்யா­னவை என்றும் அவற்றை நம்பவேண்டாம் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்­துள்ளார். கட்சித்தலை­மைக்கும் தனக்­கு­மி­டையில் எழுந்­துள்ள முரண்­பா­டுகள் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; தேசி­யப்­பட்டில்

மேலும்...
க.பொ.த. சாதாரண தரம்: அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாதோர் தொகை அதிகரிப்பு

க.பொ.த. சாதாரண தரம்: அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாதோர் தொகை அதிகரிப்பு 0

🕔30.Mar 2016

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 2015 ஆம் ஆண்டு தோற்றியவர்களில், அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாத பாடசாலை பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 8698 என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.தாம் தோற்றியிருந்த 09 பாடங்களிலும் இந்த மாணவர்கள் சித்தியடையவில்லை.கடந்த ஆண்டு 2 லட்சத்து 72 ஆயிரத்து 724 பாடசாலை பரீட்சார்திகள் பரீட்சைக்கு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.2014ம்

மேலும்...
இலவச உம்ரா திட்டத்தின் கீழ் 100 முஅத்தீன் மற்றும் இமாம்கள் பயணம்

இலவச உம்ரா திட்டத்தின் கீழ் 100 முஅத்தீன் மற்றும் இமாம்கள் பயணம் 0

🕔29.Mar 2016

நாடாளாவிய ரீதியில் முஅத்தீன்கள் மற்றும் இமாம்களுக்கான இலவச உம்ரா வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத்தெரிவித்த ஹிரா பவுன்டேஷன் தலைவரும், ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மேலும் 400 பேர் விரைவில் உம்ரா கடமைகளுக்காக மக்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.ஸ்ரீலங்கா ஹிரா பவுன்டேஷன் ஏற்பாட்டில் 55 வயதுக்கு மேற்பட்ட முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் 500 பேரை உம்ராவுக்கு இலவசமாக

மேலும்...
மின்சார பற்றாக்குறையை எதிர் கொள்ளும் வகையில், நேர மாற்றம் செய்ய திட்டம்

மின்சார பற்றாக்குறையை எதிர் கொள்ளும் வகையில், நேர மாற்றம் செய்ய திட்டம் 0

🕔28.Mar 2016

மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில், நடைமுறையிலுள்ள நேரத்தில் மாற்றம் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக புத்தாக்க சக்தி வலு அதிகாரசபையின் தலைவர் கீர்த்தி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக, மின்சார நுகர்வு அதிகரித்துள்ளது. இதனாலேயே நேர மாற்றம் தொடர்பில் யோசிக்கப்பட்டுள்ளது. சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலும், மின்சாரப் பற்றாக்குறையினை எதிர்கொள்ளும் வகையில் நேர மாற்றம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை: மு.கா.விலிருந்து இடைநிறுத்தப்பட்ட மௌலவிகள் தெரிவிப்பு

நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை: மு.கா.விலிருந்து இடைநிறுத்தப்பட்ட மௌலவிகள் தெரிவிப்பு 0

🕔28.Mar 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட மெள­லவிகளான ஏ.எல்.எம்.கலீல் மற்றும் எச்.எம்.எம். இல்யாஸ் ஆகியோர், தமது இடைநிறுத்தம் தொடர்பில் நீதிமன்றம் செல்லப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு தமது இடைநிறுத்தம் தொடர்பில் முறைப்­பாடு தெரி­வித்­துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்த அறிக்கையில் மேலும்

மேலும்...
ஆறு அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

ஆறு அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔27.Mar 2016

அமைச்சர் சிலர் மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.தமது வெளிநாட்டு விஜயங்களின் போது, மேற்படி அமைச்சர்கள் – பயணத்துக்கான நோக்கங்களுக்கு அப்பால், அரசாங்க நிதியில் கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட போதே, அமைச்சர்கள் இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்.கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு அரசாங்கத்தின் நிதிகளை

மேலும்...
மே தினக் கூட்டத்தை தனித்து நடத்துவது குறித்து, மஹிந்த தலைமையில் கலந்துரையாடல்

மே தினக் கூட்டத்தை தனித்து நடத்துவது குறித்து, மஹிந்த தலைமையில் கலந்துரையாடல் 0

🕔26.Mar 2016

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையாமல், தனியான மேதினக் கூட்டமொன்றினை நடத்துவது குறித்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கலந்துரையாடியுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், இன்று சனிக்கிழமை தலவத்துகொடையில் நடத்திய கூட்டமொன்றில், இது தொடர்பாகப் பேசுயுள்ளனர் என்று தெரிவிக்கப்டுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்பட்டு வரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், கடந்த 17ஆம் திகதி கொழும்பு

மேலும்...
மைத்திரி பணித்தும், குண்டு துளைக்காத எனக்குரிய வாகனம் திருத்தப்படவில்லை: மஹிந்த குற்றச்சாட்டு

மைத்திரி பணித்தும், குண்டு துளைக்காத எனக்குரிய வாகனம் திருத்தப்படவில்லை: மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔26.Mar 2016

தனக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனம் பழுதடைந்துள்ள நிலையில், அது இன்னமும் திருத்திக் கொடுக்கப்படவில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;“எனக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனம் பழுதடைந்துள்ளது. அதனை திருத்தும் நடவடிக்கை இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.அந்த வாகனத்தை திருத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்