தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

🕔 April 2, 2016

G.L. Peiris - 0983வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் இன்று சனிக்கிழமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்தார்.

சாவகச்சேரி பகுதியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் – வெள்ளவத்தைப் பகுதிக்கு கடத்திவருவதற்காக வைக்கப்பட்டிருந்தவை என்று, ஜீ.எல். பீரிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இந்த விடயத்தினை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முற்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

அந்தவகையில், நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்த மேற்படி கருத்துக்கள் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றினைப் பெறுவதற்காகவே, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அவர் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜீ.எல். பீரிஸுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் சீ.பி. ரத்நாயக்க ஆகியோரும் சென்றிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்