இலங்கையின் பிறப்பு வீதம் வீழ்ச்சி, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: பதிவாளர் நாயகம் திணைக்களம் தகவல்

🕔 April 28, 2024

லங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை அதேவேளை வருடாந்த இறப்புகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 325,000 ஆக இருந்த வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை, தற்போது 280,000 ஆகக் குறைந்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்ஷிகா கனேபொல கூறியுள்ளார்.

இதற்கிடையில், வருடாந்த இறப்புகளின் எண்ணிக்கை சுமார் 180,000 ஆக அதிகரித்துள்ளது. அறிக்கைகளின் படி – இது 2020 க்கு முன்பு 140,000 ஆக இருந்தது.

இந்நிலைமை இலங்கையின் சனத்தொகை வளர்ச்சியை பாதக நிலைக்குக் கொண்டு செல்லும் எனவும் பதிவாளர் நாயகம் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்