தலைப்புச் செய்திகள்

விஜேதாச ராஜபக்ஷவுக்கு இடையூறு விளைவிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தவிசாளர் விஜேதாச ராஜபக்ஷ, கட்சியின் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என கடுவெல மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ராஜிநாமா செய்தமையினை அடுத்து, கட்சியின் புதிய தலைவராக விஜதாச ராஜபக்ஷவை சுதந்திரக் கட்சியின் செயற்குழு தெரிவு செய்தது.

இதேவேளை சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளர் சட்டத்தரணி கீர்த்தி உடவத்தவும் மற்றும் கட்சியின் அரசியல் குழுவும் – சுதந்திரக் கட்சியின் நடவடிக்கையில் ஈடுபடுதற்கு இடையூறு ஏற்படுத்துவதற்கும், நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் – இசுறு அபேவர்த்தன மற்றும் சுமித் விஜயமுனி டி சொய்ஸா ஆகியோர் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் தலைவராக நேற்று (12) அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்ட போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சமூகமளித்திருந்தார்.

தொடர்பான செய்தி: சுதந்திர கட்சி தலைவர் பதவியிலிருந்து மைத்திரி ராஜிநாமா; விஜேதாச நியமனம்