தலைப்புச் செய்திகள்

சுதந்திர கட்சி தலைவர் பதவியிலிருந்து மைத்திரி ராஜிநாமா; விஜேதாச நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராஜினாமா செய்துள்ளார்.

அதனையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கு கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

இன்று (12) கோட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.