பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்திக் கொண்ட ‘முதல் நபர்’ மரணம்

🕔 May 12, 2024

ரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்திக் கொண்ட முதலாவது நபர், அறுவை சிகிச்சைக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு இறந்துவிட்டார் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சட் ஸ்லேமான் எனும் 62 வயதுடைய நபர், இவ்வருடம் மார்ச் மாதம் அறுவை சிகிச்சைக்கு முன்னர் – சிறுநீரக நோயின் இறுதி நிலையினால் அவதிப்பட்டார்.

இந்த நிலையில் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்திக் கொண்ட அவர், இன்று ஞாயிற்றுக்கிழமை (12) மரணித்ததாக வைத்தியசாலை தெரிவித்துள்ளது. ஆயினும், அவரின் மரணம் மாற்று அறுவை சிகிச்சையின் விளைவாக ஏற்பட்டதல்ல எனவும் வைத்தியசாலை குறிப்பிட்டுள்ளது.

மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் பிற உறுப்புகளை மனிதர்களுக்கு மாற்றும் நடவடிக்கை – கடந்த காலங்களில் தோல்வியடைந்த போதிலும், ஸ்லேமானின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒரு வரலாற்று மைல்கல் என்று பாராட்டப்பட்டது.

சிறுநீரக நோய்க்கு மேலதிகமாக, மேற்படி ஸ்லேமான் என்பவர் இரண்டாம் வகை நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியற்றினாலும் பாதிக்கப்பட்டிருந்தார். 2018ஆம் ஆண்டு அவருக்கு மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட் போதிலும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவரின் சிறுநீரகம் செயலிழந்தது.

இந்த நிலையில் இவ்வருடம் மார்ச் 16 அன்று – மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் அவருக்கு பொருத்தப்பட்டது. இதனையடுத்து – புதிய உறுப்பு நன்றாகச் செயல்படுவதாகக் கூறப்பட்டதை அடுத்து, அவருக்கு ‘டயாலிசிஸ்’ தேவையில்லை என்று வைத்தியர்கள் உறுதி செய்தனர்.

பன்றியொன்றின் சிறுநீரகத்தைப் பெற்றுக் கொண்ட முதல் நபர் ஸ்லேமான் என்றாலும், பன்றியொன்றின் உடல் உறுப்பை பெற்றுக் கொண்ட முதல் நபர் இவரல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பன்றிகளின் இதயங்கள் இரண்டு நபர்களுக்கு பொருத்தப்பட்டன. ஆனால் அவர்கள் மாற்ற அறுவை சிகிச்சை நடந்து – சில வாரங்களுக்குப் பிறகு இறந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்