ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம் அதிகரிக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

🕔 April 28, 2024

ழியர் சேமலாப நிதியத்தின் (EPF) வட்டி வீதத்தை 2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்போதுள்ள 9% இலிருந்து 13% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

“ஊழியர் சேமலாப நிதியம் நம் நாட்டில் மிகப்பெரிய நிதியமாகும், 27 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 2023ம் ஆண்டுக்காக ஊழியர் சேமலாப நிதியம் ஊடாக முதலீடு செய்து ஈட்டிய பணத்தில் 09 சதவீதத்திற்கு பதிலாக 13 சதவீதத்தை வட்டியாக செலுத்த தயாராக உள்ளோம்.

குறைந்தபட்ச தொகையாக 09 சதவீத வட்டியை வழங்க முடியுமாக இருந்தது. ஆனால் அரசாங்கம் 13 சதவீதத்தை செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இது அரசாங்கத்துக்குக் கிடைத்த வெற்றியாகும், அதன் உறுப்பினர்களுக்கும் இது வெற்றியாகும். இந்த நிதியை முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தின் நியாயமான பகுதி உறுப்பினர்களுக்கு செல்கிறது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்