வெப்ப காலத்தில் ‘டை’ அணியாமலிருப்பதற்கான அனுமதி வழங்கப்படுவது, பாடசாலை மாணவர்களுக்கு ஆறுதலாக அமையும்

🕔 April 29, 2024

நாட்டில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில் – அதன் பாதிப்பிலிருந்து ஓரளவாயினும் விடுபடுவதற்கான நடவடிக்கைகளை பாடசாலைகள் மேற்கொள்தல் வேண்டும்.

தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் ‘டை’ (Tie) அணியாமல் இருப்பதற்கான அனுமதியை பாடசாலை நிர்வாகம் வழங்குமாயின், மாணவர்களுக்கு அது ஓரளவு ஆறுதலாக இருக்கும்.

மேலும் விளையாட்டுப் போட்டிகளுக்கான தெரிவுகளும் – சில பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றன. அவற்றினையும் – வெப்ப காலத்தை மனதிற் கொண்டு பிற்போடுவதும் பொருத்தமாக அமையும்.

தற்போதைய வெப்ப காலத்தில் பாடசாலைகளில் மாணவர்கள் நீர் அருந்துவதை ஊக்கப்படுத்துவதையும் ஆசிரியர் மேற்கொள்ளலாம்

அதிக வெப்பம் மற்றும் அதனால் ஏற்படும் தொடர்ச்சியான நீரிழப்பு காரணமாக வெப்ப மயக்கம் (Heat Syncope) மற்றும் வெப்ப வாதம் (Heat Stroke) ஆகியவை ஏற்படக் கூடும். வெப்ப வாதம் காரணமாக நினைவிழக்கக் கூடிய அபாயம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயங்களை கல்வி அதிகாரிகளும் பாடசாலை நிர்வாகத்தினரும் உடனடிக் கவனத்தில் கொள்தல் அவசியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்