மின்சார பற்றாக்குறையை எதிர் கொள்ளும் வகையில், நேர மாற்றம் செய்ய திட்டம்

🕔 March 28, 2016

Time change - 0132மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில், நடைமுறையிலுள்ள நேரத்தில் மாற்றம் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக புத்தாக்க சக்தி வலு அதிகாரசபையின் தலைவர் கீர்த்தி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக, மின்சார நுகர்வு அதிகரித்துள்ளது. இதனாலேயே நேர மாற்றம் தொடர்பில் யோசிக்கப்பட்டுள்ளது.

சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலும், மின்சாரப் பற்றாக்குறையினை எதிர்கொள்ளும் வகையில் நேர மாற்றம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேர மாற்றம் தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் கீர்த்தி விக்கிரமரத்ன மேலும் கூறியுள்ளார்.

மின்சாரத்தின் பாவனை சாதரணமாக 2200 மெகா வோட்ஸ் ஆக இருந்தது. ஆயினும் தற்போது 200 மெகா வோட்ஸினால் அந்தப் பாவனை அதிகரித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்