நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை: மு.கா.விலிருந்து இடைநிறுத்தப்பட்ட மௌலவிகள் தெரிவிப்பு

🕔 March 28, 2016

Kaleel+Ilyas - 087ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட மெள­லவிகளான ஏ.எல்.எம்.கலீல் மற்றும் எச்.எம்.எம். இல்யாஸ் ஆகியோர், தமது இடைநிறுத்தம் தொடர்பில் நீதிமன்றம் செல்லப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இருவரும் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு தமது இடைநிறுத்தம் தொடர்பில் முறைப்­பாடு தெரி­வித்­துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கட்­சியின் யாப்பில் அல்­குர்ஆன், ஹதீஸ் மற்றும் மஸுராக் கோட்­பா­டு­க­ளுக்கு அமை­வாக திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்­கா­கவும், இவ்­வா­றான மாற்­றங்­களை இக்­கட்­சியில் உள்ள பெரும்­பா­லான மூத்த உறுப்­பி­னர்­களும் விரும்­பி­யி­ருந்த­தாலும் தலை­வ­ருக்கு ஒரு வேண்­டு­கோளை முன்­வைப்­ப­தற்­கா­கவே பொது மக­ஜரில் நாங்கள் கையொப்­ப­மிட்டோம்.

எனினும் அந்த மக­ஜரில் கையொப்­ப­மிட்­ட­தற்குப் பின்னர், அதில் உள்ள முதல் பக்­கத்தில் தலை­வ­ருக்கு எதி­ரான விட­யங்­களை வேறு­சில தரப்­பினர் உள்­ள­டக்கி, தலை­வ­ருக்கு எதி­ராக சதி செய்ய விழைந்­த­தாக எங்கள் இருவர் மீதும் குற்றம் சாட்­டப்­ப­டு­வ­தாக புதிய தக­வல்கள் வெளி­யா­கியுள்ளன. இதனைத் தொடர்ந்து, குறிப்­பிட்ட அந்த மக­ஜரின் பிர­தி­யையும், கட்சி யாப்பின் பிர­தி­யையும், கட்­சியின் ஒழுக்க நெறிக் கோவை­யையும் எங்­க­ளது முறைப்­பாட்­டுடன் ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யிடம் கைய­ளித்­துள்ளோம்.

அல் குர் ஆன் மற்றும் ஹதீஸ் வழி­காட்­டலில் கட்சி யாப்பு அமை­வ­தனை உறு­திப்­ப­டுத்­து­வதே எங்­க­ளது உயர்­வான நோக்கமாகும். கட்சித் தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ராக செயல்­ப­டு­வது எங்­க­ளின் நோக்­க­மில்லை என்றும் தெளி­வு­ப­டுத்­து­கிறோம்.

மேற்­கூ­றிய உய­ரிய விழு­மி­யங்­களால் கட்­டுண்டு, கட்­சியின் பிரச்­சி­னை­களை நாங்கள் நீதி­மன்­றத்­திற்கு எடுத்துச் சென்று வாதாட ஒரு போதும் விரும்­ப­வில்லை. அதனால்தான் ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் முன், எங்­க­ளது முறைப்­பாட்­டினை முன்­வைத்­துள்ளோம் என்­ப­த­னையும் தெரி­வித்துக் கொள்­கிறோம்”

இவ்விடயம் குறித்து, மேற்படி  இருவரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமுக்கும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கும்  கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்