ஆறு அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

தமது வெளிநாட்டு விஜயங்களின் போது, மேற்படி அமைச்சர்கள் – பயணத்துக்கான நோக்கங்களுக்கு அப்பால், அரசாங்க நிதியில் கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட போதே, அமைச்சர்கள் இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்.
கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு அரசாங்கத்தின் நிதிகளை வீணாக செலவிட்டமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியால் ஒழுக்க விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.