அமைச்சரவை மாற்றம்: பதவியிழக்கின்றனர் 05 அமைச்சர்கள்

🕔 April 3, 2016

Sad - 09மைச்சரவை மாற்றங்களின் போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள 05 அமைச்சர்கள் தமது பதவிகளை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ சீன விஜயத்தினை அடுத்து, அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது.

மேற்படி விஜயத்தின் பொருட்டு, எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை, பிரதமர் சீனாவில் தங்கியிருப்பார்.

இந்த விஜயத்தினை அடுத்து இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றங்களின்போது, தற்போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக உள்ளவர்களில் 05 பேரின் பதவிகள் பறிபோகும் நிலை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்