க.பொ.த. சாதாரண தரம்: அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாதோர் தொகை அதிகரிப்பு

🕔 March 30, 2016
OL Exame - 0125ல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 2015 ஆம் ஆண்டு தோற்றியவர்களில், அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாத பாடசாலை பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 8698 என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாம் தோற்றியிருந்த 09 பாடங்களிலும் இந்த மாணவர்கள் சித்தியடையவில்லை.

கடந்த ஆண்டு 2 லட்சத்து 72 ஆயிரத்து 724 பாடசாலை பரீட்சார்திகள் பரீட்சைக்கு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

2014ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்கைக்குத் தோற்றிய 8147 பாடசாலை பரீட்சார்த்திகள் சகல பாடங்களிலும் சித்தியடையாமல் போயினர்.

இந்த எண்ணிக்கை கடந்த 2015ம் ஆண்டு 557 பேரினால் உயர்வடைந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்