மே தினக் கூட்டத்தை தனித்து நடத்துவது குறித்து, மஹிந்த தலைமையில் கலந்துரையாடல்

🕔 March 26, 2016

Mahinda Rajapaksa - 054ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையாமல், தனியான மேதினக் கூட்டமொன்றினை நடத்துவது குறித்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கலந்துரையாடியுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், இன்று சனிக்கிழமை தலவத்துகொடையில் நடத்திய கூட்டமொன்றில், இது தொடர்பாகப் பேசுயுள்ளனர் என்று தெரிவிக்கப்டுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்பட்டு வரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், கடந்த 17ஆம் திகதி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் ‘மக்கள் சக்தி’ என்ற தொனியில் அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் எதிர்ப்பு கூட்டமொன்றினை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், எதிர்வரும் மே தினக் கூட்டத்தினையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையாமல் தனித்து நடத்துவது குறித்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கலந்தாலோசித்துள்ளனர்.

கடந்த வருடமும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தனியான ஒரு மேதினக் கூட்டத்தினை நடத்திய போதும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த கூட்டத்தில் பங்கேற்றவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்