அதிகரிக்கப்பட்ட வற் வரி, இப்போதைக்கு இல்லை: அரசாங்கம் அறிவிப்பு

🕔 April 1, 2016
VAT - 01ற் வரியை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், அந்த நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் வருமான இழப்பு மற்றும் செலவீனங்களை ஈடு செய்யும் வகையில் வற் வரியை இரண்டரை வீதத்தினால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

தற்போது 11 வீதமாக அறவிடப்படும் வற் வரியினை, புதிய முறையின் கீழ் பதினைந்து வீதமாக அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இந்த வரி அதிகரிப்பு, இன்று ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல், நடைமுறைக்கு வரும் என்று நிதியமைச்சின் அறிவித்தல்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கு எதிராக பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் தரப்பிலிருந்து கடுமையான ஆட்சேபனைகள் வெளிக்கிளம்பியிருந்தன.

இந்நிலையில், வற் வரி அதிகரிப்பை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக இன்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்