வற் வரி, மே 02 முதல் 15 வீதமாக அதிகரிக்கப்படுகிறது

வற் வரி, மே 02 முதல் 15 வீதமாக அதிகரிக்கப்படுகிறது 0

🕔15.Apr 2016

பெறுமதி சேர் வரி (VAT), மே மாதம் 02ஆம் திகதி முதல் 15%  ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் 15% ஆக வற் வரி அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆயினும், மறுஅறிவித்தல் வரை இந்த அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கல்யாணி தஹநாயக்க, ஏப்ரல் 01ம் திகதியன்று அறிக்கையொன்றின் மூலம்

மேலும்...
பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை அதிகரிக்கிறது

பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை அதிகரிக்கிறது 0

🕔14.Apr 2016

பட்டதாரிகளை அரச சேவையில் சேர்த்துக்கொள்வதற்குரிய குறைந்தபட்ச வயதெல்லையை 45 ஆக அதிகரிப்பதற்கான பிரேரணை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் வயதெல்லை தற்போது 35 ஆகும். வேலையற்ற பட்டதாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னரே இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், தங்களின்

மேலும்...
இலங்கையில் முலீடு செய்வதற்கு சவூதி இளவரசர் இணக்கம்; அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு

இலங்கையில் முலீடு செய்வதற்கு சவூதி இளவரசர் இணக்கம்; அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு 0

🕔14.Apr 2016

சவூதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் பின் பைசல் இலங்கையில் முதலீடு செய்யவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார் என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.இதற்கமைய அவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அரச மட்ட உயர் அதிகாரிகளுடன் இரு தரப்பு பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறியுள்ளார்.உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சவூதி அரேபியா

மேலும்...
பொலிஸ் நிலையம் உடைக்கப்பட்டு, ஆயுதங்கள் திருட்டு

பொலிஸ் நிலையம் உடைக்கப்பட்டு, ஆயுதங்கள் திருட்டு 0

🕔14.Apr 2016

மாத்தளை மாவட்டம் – லக்கல பொலிஸ் நிலையம் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பல ஆயுதங்கள் களவாடப்பட்டுள்ளன. இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. பொலிஸ் நிலையத்தினை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்து ஒரு ரி – 56 ரக துப்பாக்கி மற்றும் 05 பிஸ்டல் உள்ளிட்ட ஆயுதங்களைக் களவாடிச் சென்றுள்ளனர்.

மேலும்...
நாட்டில் இன்று மழை பெய்யும்; வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்

நாட்டில் இன்று மழை பெய்யும்; வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல் 0

🕔14.Apr 2016

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று வியாழக்கிழமை பிற்பகல் மழை பொழிவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மிகக் கடுமையான வெப்பத்தால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வரும் நிலையிலேயே, இவ்வாறு மழை வீச்சிக்கான எதிர்வு கூறல் விடுக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலேயே இன்று பிற்பகல் மழை பெய்யும் என்று எதிர்வு

மேலும்...
எனக்கு 23, உனக்கு 41: தேசம் தாண்டிய பேஸ்புக் காதல்

எனக்கு 23, உனக்கு 41: தேசம் தாண்டிய பேஸ்புக் காதல் 0

🕔14.Apr 2016

பேஸ்புக்கில் நண்பர்களாக அறிமுகமாகி, பின்னர் காதலர்களாக மாறிய 23 வயது இந்திய இளைஞரும், அமெரிக்காவைச் சேர்ந்த 41 வயதான பெண்ணும் திருமணம் செய்து கொண்டனர். இந்தியா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹிதேஷ் சாவ்டா எனும் இளைஞரும், அமெரிக்காவை சேர்ந்த எமிலி என்பவருமே இவ்வாறு திருமணம் செய்துள்ளனர். ஹிதேஷ் சாவ்டா ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்டவர். அவருக்கு

மேலும்...
மூன்று வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கி; சீசெல்ஸ் நாட்டில், மஹிந்த திறந்த BOC கிளையின் பரிதாபம்

மூன்று வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கி; சீசெல்ஸ் நாட்டில், மஹிந்த திறந்த BOC கிளையின் பரிதாபம் 0

🕔13.Apr 2016

சீசெல்ஸ் நாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்ட இலங்கை வங்கிக் கிளையில் மூன்று வாடிக்கையாளர்கள் மட்டுமே தமது வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரியவந்துள்ளது. இந்த இலங்கை வங்கிக் கிளையானது 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி, இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்டது.

மேலும்...
பாதாள உலகத்தின் ஏகபோக உரிமைக்கான மும்முனைச் சண்டை தீவிரம்; பொலிஸார் நடவடிக்கை

பாதாள உலகத்தின் ஏகபோக உரிமைக்கான மும்முனைச் சண்டை தீவிரம்; பொலிஸார் நடவடிக்கை 0

🕔13.Apr 2016

இலங்கையில் செயற்பட்டு வரும் பாதாள உலக நடவடிக்கைகளின் ஏகபோக உரிமையினைக் கைப்பற்றிக் கொள்ளும் பொருட்டு, அதனுடன் தொடர்புடைய மூன்று குழுக்கள், மோதல்களில் ஈடுபட்டு வருவதாக, பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல குற்ற செயல்களை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காகவே, அவர்கள் இவ்வாறான சண்டையில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இந் நிலையில், மூன்று குழுக்களுனும் தொடர்புடைய 40 பேரை தேடும் பணியில் பொலிஸ் விசேட குழுவினர்

மேலும்...
சம்மாந்துறையில் இளைஞன் கொலை; காதல் விவகாரம், காரணம் என தகவல்

சம்மாந்துறையில் இளைஞன் கொலை; காதல் விவகாரம், காரணம் என தகவல் 0

🕔13.Apr 2016

இளைஞர் ஒருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சம்மாந்துறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. சம்மாந்துறை சென்னல் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சுலைமாலெப்பை அப்துல் அலி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இரு இளைஞர்களுக்கிடையே கைத்தொலைபேசியில் ஏற்பட்ட வாய்தர்கம் பின்னர் கொலையில் முடிவடைந்துள்ளது. பெண் ஒருவர் மீதான காதல்தான் இந்தப் பிரச்சினைக்குக்

மேலும்...
ஈழத்தை அமைக்க, வட மாகாணசபை முயற்சிக்கும்: மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை

ஈழத்தை அமைக்க, வட மாகாணசபை முயற்சிக்கும்: மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை 0

🕔13.Apr 2016

ஈழத்தைஉருவாக்க வடமாகாண சபை எதிர்காலத்தில் முயற்சிக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகத்திலிருக்கும் வடமாகாண சபை முன்வைக்கும் யோசனைகளைப் பார்க்கும் போது அவ்வாறுதான் எண்ணத் தோன்றுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். வடமாகாண சபையின் எதிர்பார்ப்பு ஒருபோதும் நிறைவேறாது என்றும், மாகாணங்களை இணைப்பதற்கும், பிரிப்பதற்கும் எந்தவொரு மாகாண சபைக்கும்அதிகாரம் கிடையாது என்றும் முன்னாள்

மேலும்...
மீண்டும் நிதி மோசடிக் குற்றச்சாட்டு; யோசிதவைச் சுற்றி விரிகிறது வலை

மீண்டும் நிதி மோசடிக் குற்றச்சாட்டு; யோசிதவைச் சுற்றி விரிகிறது வலை 0

🕔13.Apr 2016

யோசித்த ராஜபக்ஷ, மீண்டும் நிதி மோசடிக் குற்றசாட்டில் சிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது. நிதி மோசடி தொடர்பான பொலிஸ் பிரிவு இந்தக் குற்றச்சாட்டினை மேற்கொள்ளவுள்ளது. சி.எஸ்.என். தொலைக்காட்சிக்கு முதலீடு செய்வதற்காக, யோசித்தவுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்பதை வெளிப்படுத்தாமை காரணமாக, அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். இந்தநிலையில், பல மில்லியன்கள் செலவில் தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் கட்டப்பட்டுள்ள

மேலும்...
விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா பயணமானார் கோட்டா

விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா பயணமானார் கோட்டா 0

🕔12.Apr 2016

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, அமெரிக்காவுக்கு திடீரென பயணமாகியுள்ளார். எதிர்வரும் 18ஆம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே கோட்டபாய அவசரமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 179 பேரை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தியமை தொடர்பில், மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுகொள்ளும் பொருட்டு, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

மேலும்...
அனோமா தலையணைச் சண்டை, மஸ்தான் ஓடினார்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் புதுவருட நிகழ்வு

அனோமா தலையணைச் சண்டை, மஸ்தான் ஓடினார்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் புதுவருட நிகழ்வு 0

🕔12.Apr 2016

– அஷ்ரப் ஏ சமத் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியா்களின் முன் கூட்டிய தமிழ் – சிங்கள புதுவருட நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை கொழும்பு டொரிங்டன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. சபாநாயகா் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெற்றன. ஓட்டப்போட்டி, தலையணைச் சண்டை, கயிறிழுத்தல், கிறிக்கட் போட்டி ஆகியவை

மேலும்...
பதில் பொலிஸ் மா அதிபராக விக்கிரமசிங்க நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபராக விக்கிரமசிங்க நியமனம் 0

🕔12.Apr 2016

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்கவை, பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் நேற்று திங்கட்கிழமை தினம் ஓய்வு பெற்றுச் சென்றமையினை அடுத்து, பதில் பொலிஸ் மா அதிபராக விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபராக, ஐந்து வருடங்கள் கடமையாற்றிய இலங்கக்கோன்

மேலும்...
பசில் ராஜபக்ஷவுக்கு எக்கச்சக்க பாதுகாப்பு வழங்கியமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை

பசில் ராஜபக்ஷவுக்கு எக்கச்சக்க பாதுகாப்பு வழங்கியமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை 0

🕔12.Apr 2016

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தின் போது கூடுதல் பாதுகாப்பு வழங்கியமை குறித்து, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரிய நிதி மோசடிகள், அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் 18ம் திகதி ஆணைக்குழுவின்

மேலும்...