பசில் ராஜபக்ஷவுக்கு எக்கச்சக்க பாதுகாப்பு வழங்கியமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை

🕔 April 12, 2016
Basil+Gotta - 012முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தின் போது கூடுதல் பாதுகாப்பு வழங்கியமை குறித்து, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாரிய நிதி மோசடிகள், அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது.

எதிர்வரும் 18ம் திகதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு கோத்தபாயவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 179 பேர் பசில் ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.

பசிலின் மனைவியின் பாதுகாப்புக்காகவும்,பெண் கடற்படை உத்தியோகத்தர்கள் மூன்று பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதேவேளை, பசில் ராஜபக்ஷவின் வீட்டை சுத்தம் செய்யும் பணிகளும் பாதுகாப்புத் தரப்பினைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அமைச்சர் ஒருவருக்கு இவ்வளவு பாதுகாப்பு வழங்கப்பட்டமை பாரிய பிரச்சினையாகும். அமைச்சர் ஒருவரின் அதிகாரங்களை முழுமையாக மீறி, படையினரையும் பொலிஸாரையும் எந்தவிதமான அடிப்படையும் இன்றி கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்