சம்மாந்துறையில் இளைஞன் கொலை; காதல் விவகாரம், காரணம் என தகவல்

🕔 April 13, 2016

Knife - 034ளைஞர் ஒருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சம்மாந்துறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது.

சம்மாந்துறை சென்னல் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சுலைமாலெப்பை அப்துல் அலி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரு இளைஞர்களுக்கிடையே கைத்தொலைபேசியில் ஏற்பட்ட வாய்தர்கம் பின்னர் கொலையில் முடிவடைந்துள்ளது.

பெண் ஒருவர் மீதான காதல்தான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்று அறிய முடிகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் ஒருவரை காதலித்து வரும் இருவருக்கு இடையில் கைத்தொலைபேசியில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பிரதான சூத்திரதாரி தலைமறைவாகியுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்