போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல குற்ற செயல்களை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காகவே, அவர்கள் இவ்வாறான சண்டையில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில், மூன்று குழுக்களுனும் தொடர்புடைய 40 பேரை தேடும் பணியில் பொலிஸ் விசேட குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி மூன்று பாதாள குழுக்களில், தனுஷ்க லக்மின என்பவரின் கீழ் ஒரு குழுவும், தெமட்டகொட சமிந்தவின் கீழ் இன்னொரு குழுவும், மூன்றாவது குழு சமயன் மற்றும் ஆமிசம்பத் ஆகியோரின் கீழ் செயற்படுத்தப்படுவதாக, பாதாள குழு தொடர்பில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த பாதாள குழுக்களுக்களுடன் தொடர்புடைய சில உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்கள் இந்த தகவல்களைக் கூறியுள்ளனர்.
இந்த பாதாளக் குழுக்கள் மூன்றுக்கும் ஆதரவு வழங்குவதற்கு 30 பேர் உள்ளதாகவும். ஒவ்வொரு குழுவும் தலா 10 பேருடன் தொடர்புபட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்துவதற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் கண்கானிப்பின் கீழ், பொலிஸ் பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதாள குழுக்களின் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சொகுசு வாகனங்கள் வழங்குபவர்களை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடந்த வாரம் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.