எனக்கு 23, உனக்கு 41: தேசம் தாண்டிய பேஸ்புக் காதல்

🕔 April 14, 2016

Face book love - 03பேஸ்புக்கில் நண்பர்களாக அறிமுகமாகி, பின்னர் காதலர்களாக மாறிய 23 வயது இந்திய இளைஞரும், அமெரிக்காவைச் சேர்ந்த 41 வயதான பெண்ணும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தியா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹிதேஷ் சாவ்டா எனும் இளைஞரும், அமெரிக்காவை சேர்ந்த எமிலி என்பவருமே இவ்வாறு திருமணம் செய்துள்ளனர்.

ஹிதேஷ் சாவ்டா ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்டவர். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. அதேபோன்று, எமிலிக்கு ஹிந்தி தெரியாது அவர் ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்டவர். ஆயினும், இருவரும் தத்தமது மொழியில் அனுப்பும் பேஸ்புக் செய்திகளை பரஸ்பம் கூகுள் மொழி பெயர்ப்பின் மூலமாக புரிந்து கொண்டனர்.

நண்பர்களாக பழகி வந்த இருவரும் நாளடைவில் காதலர்களாக மாறினர். இதனையடுத்து, ஹிதேஷை நேரில் சந்திக்க விரும்பிய எமிலி இந்தியாவிற்கு வந்துள்ளார். இவர்கள் காதல் விவகாரம் ஹிதேஷ் சாவ்டா வீட்டுக்குத் தெரியவந்துள்ளது.

முதலில் இவர்களின் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த ஹிதேஷின் பெற்றோர், பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஹிதேஷின்பெற்றோர் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்