மூன்று வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கி; சீசெல்ஸ் நாட்டில், மஹிந்த திறந்த BOC கிளையின் பரிதாபம்

🕔 April 13, 2016

BOC - Seychelles Branch - 02சீசெல்ஸ் நாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்ட இலங்கை வங்கிக் கிளையில் மூன்று வாடிக்கையாளர்கள் மட்டுமே தமது வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.

இந்த இலங்கை வங்கிக் கிளையானது 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி, இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்டது.

ஆபிரிக்க நாடுகளில் திறக்கப்பட்ட முதலாவது இலங்கை வங்கிக் கிளை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சீசெல்ஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை வங்கிக் கிளை தொடர்பில், பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழு (கோப்) தீர்மானமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

இந்த வங்கிக் கிளையின் நடவடிக்கைகள் குறித்து, இலங்கை வங்கியின் முகாமையிடம், கோப் குழு அறிக்கையினைக் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது,

Comments

புதிது பேஸ்புக் பக்கம்